மாநாடு 25 August 2025
பத்துக்கு பத்து அறையில் நாயை பூட்டி பத்து நாட்கள் சோறு போடாமல் பட்டினியில் போட்டு வைத்து கதவைத் திறந்து விட்டால் கண்ட இடத்தில் வாய் வைத்து கண்டதை தின்று கொழுப்பது போல பல அரசு ஊழியர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து கண்ட இடத்தில் கண்ட விதத்தில் கைவைத்து ஊழல் முறைகேடு செய்து கொழுத்து வருவதையும், யார் யாருக்கு எப்ப எந்தவிதத்தில் கவனிக்க வேண்டுமோ அந்த விதத்தில் கவனித்து பதவி உயர்வு பெற்று பகட்டாக வாழ்வதையும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ஜனநாயக கடமையை உணர்ந்து கடமையாற்றும் சமூக ஆர்வலர்களும் , சம்பந்தப்பட்ட ஊழல் பேர்வழிகளும் நன்கறிவர் அதேபோல நாடறிய வழக்கில் மாட்டிக் கொண்டு லோள்பட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து செய்தித்தாள்களில் செய்தியாகி கைப்பேசியில் கவன செய்தியாகி மானம் போகும் போது வெட்கி தலைகுனிந்து தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தினரையும் தலைகுனிய வைப்பவர்களும் இது மாதிரியான பேர்வழிகளை காப்பாற்றி அவர்களின் ஊழல் செயலுக்கு துணைப் போய்க் கொண்டிருக்கும் பலரும் அறிய வேண்டிய செய்தி யாதெனில் குற்றம் செய்வது தெரிய வந்தால் பதவி உயர்வு பெற்றவர்களாக இருந்தாலும், பணி ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களின் மீது வழக்கு பதிந்து தண்டனை கொடுக்கப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது இந்த செய்தி அதாவது 2 ஆண்டுகளில் 2 கோடிக்கு மேல் மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தி ஊழல் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதன் விபரம் பின்வருமாறு:
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி நிதி 2 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக பயன்படுத்தியதற்காக முன்னாள் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர், முன்னாள் ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரைக்குடி அருகே உள்ளது சங்கராபுரம் ஊராட்சி. இங்கு 2020 மே முதல் 2022 டிசம்பர் வரை மரம் வெட்டுதல், மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்தல், சாலையின் இருபுறங்களிலும் உள்ள தாவரங்களை அகற்றுவது, சாலை பழுதுபார்க்கும் பணி, குப்பை அகற்ற டிராக்டர் வாடகை, துடைப்பம் வாங்குதல், நிர்வாகச் செலவு, கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு ஆயத்த பணிகள், கிருமி நாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் செய்ததாக போலி ஆவணங்களை தயாரித்து
சங்கராபுரம் கிராம ஊராட்சி நிதி ரூ.2 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 207ஐ முறைகேடாக பயன்படுத்தியதாக சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்திருக்கிறது . அதன் அடிப்படையில் டி.எஸ்.பி.ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ் விசாரணை நடத்தியதில். பணம் முறைகேடாக பயன்படுத்தியது உண்மை என தெரியவந்துள்ளது. அப்போது சங்கராபுரம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த பாண்டியராஜன், 6வது வார்டு உறுப்பினர் நல்லம்மாள் செல்வராணி , முன்னாள் ஊராட்சி செயலர் அண்ணாமலை , முன்னாள் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா , கேசவன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை தற்போது திருப்புத்துார் ஒன்றியம் மணமேல் பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரிகிறார். ஹேமலதா தற்போது பதவி உயர்வில் புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குநராக (தணிக்கை) உள்ளார். கேசவன் பணி ஓய்வு பெற்று விட்டார் என்பதும் ஓய்வு பெற்று விட்டாலும் ஊழல் செய்த அரசு ஊழியர்கள் மீது வழக்கு பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.