Spread the love

முதல்வர் ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும் 

தமிழகத்தில் சேலம் -சென்னை 8வழி சாலை போட ஒன்றிய அரசு தீவிரமாக இருந்த நேரத்தில் அப்போது இருந்த அதிமுக அரசும் அத்திட்டத்தை ஆதரிக்கும் விதமாகவே நடந்துக்கொண்டது இதை அனைத்து தரப்பினரும் எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் இன்று ஆளும்கட்சியாக இருக்கும் திமுகவும் எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும் தடைக்கோரி வழக்கு தொடுத்தார்கள், இப்படி அனைவராலும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட 8வழி சாலை திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஜனவரி 22 பதிவிட்டுள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம்
அதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன முதல்வர் இத்திட்டங்களை ஆய்வு செய்து ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு மீது மத்திய நெடுஞ்சாலைத் துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக கூறியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையானது. இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானவை. நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடக்காமல் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். எந்தத் திட்டப் பணிகளும் நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்றும்,

சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் என்பதால் அத்திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.
மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் கூட அதை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்; அத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்

8880cookie-checkஎன்னா சொல்றிங்க ஸ்டாலின் ராமதாஸ் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!