Spread the love

மத்திய அரசின் திட்டதிற்கு ஆதரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து கேட்டதும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதையும் ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிவோம் இதற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் .

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.தொழில் முன்னேற்றத்திற்கு சாலைகள் இன்றியமையாதவை என்பதால் தரமான சாலைகளை அமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் மயமான தமிழ்நாட்டிற்கு சாலைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளோம். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த தேவையான முழு ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

2020 எட்டுவழி சாலைககு திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிட்டதக்கது

அதேசமயம் எட்டுவழி சாலை போன்ற மக்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்கள் நடத்தி நிறுத்தி வைக்க பட்ட திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

9750cookie-checkமத்திய அரசுக்கு ஆதரவு ஸ்டாலின் கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!