மாநாடு 19 December 2022
இன்று காலை ஏஐடியூசி மாநிலச் செயலாளராக பணியாற்றி ஊழியர்களின் உரிமைகளை பெற்று தந்த என்.புன்னிஸ்வரனின் முதலாம் ஆண்டு மலர் வணக்க நிகழ்வு தஞ்சாவூரில் நடைபெற்றது அப்போது மாநில அரசுக்கு கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைக்கப்பட்டது .
என்.புண்ணீஸ்வரன் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் தர ஆய்வாளராக 33 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனது பணி காலத்தில் ஏஐடியூசி நுகர்பொருள் தொழிலாளர் சங்கத்தில் மாநில செயலாளராக செயல்பட்டவர், பணியாளர்களின் உரிமைகளுக்காகவும், நுகர் பொருள் வாணிபகழக செயல்பாடுகள் சிறந்து விளங்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, தொழிற்சங்க பணியாற்றியவர். கடந்த 2015 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பிறகு நுகர் பொருள் வாணிப கழக ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளராக பணியாற்றியவர், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி மிகவும் குறைவாக இருந்ததை தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு சென்றும் மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 3.25 என கூலி வழங்கியதை ரூபாய் 10 என பெற்றுத் தந்த பெருமைக்குரியவர். இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. வங்கி ஊழியர்சங்க மாவட்ட செயலாளர், க.அன்பழகன், வருவாய் துறை ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் ந.பாலசுப்பிரமணியன், மூத்த தலைவர். ஜி.கிருஷ்ணன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். பி. முத்துக்குமரன், உடலுழைப்பு சங்க மாவட்ட துணை தலைவர் க.கல்யாணி, பொருளாளர் பி.சுதா, நுகர்பொருள் சங்க நிர்வாகிகள் எஸ். செல்வம், பி.மாரியப்பன், வெ.சந்தான கிருஷ்ணன், துரை.நாடியப்பன், கட்டுமான சங்க தலைவர் பி.செல்வராஜ், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சுமை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும், திறந்தவெளி சேமிப்பு மையம் மற்றும் கிடங்குகளில் சுமைதூக்கும் பணியை தனியாருக்கு விடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கப்பட்டது.
முன்னதாக புண்ணீஸ்வரன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோன்று சுமைதூக்கம் சங்க பொதுச் செயலாளர் என்.புண்ணீஸ்வரன் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மன்னார்குடி,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றது.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.