மாநாடு 22 February 2022
தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள ஒரத்தநாடு தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த முக்கியமான பகுதியாகும். இங்கு திராவிடர் கழகமும்,திராவிட முன்னேற்றக்கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், நன்கு வேரூன்றிய பகுதியாகும் இங்கு மாறி மாறி திராவிட கட்சிகள் தான் முழு ஆளுமையை செலுத்தி வந்தது. அதிலும் குறிப்பாக திமுகவும், அதிமுகவும்,தங்கள் கைவசம் வைத்திருந்த பகுதிதான் இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியுள்ள ஒரத்தநாடு பேரூராட்சி மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் இப்போது உள்ள அதிமுக தலைவர்களில் மிகவும் முக்கியமானவராக இருப்பவர் ஆர்.வைத்திலிங்கம் இவரின் சொந்த ஊர் ஒரத்தநாடு என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல திமுகவின் எல் கணேசன் அவர்களின் சொந்த ஊர் ஒரத்தநாடு இப்படி இருந்த போதும் இப்போது கைநழுவிப்போவதற்கு திமுகவில் காரணமாக சொல்லப்படுவது, இந்த தேர்தலில் வேலை செய்வதற்காக ஒரத்தநாடு சேர்மனை தலைமையாக போடாமல் அந்த பகுதிக்கு சம்பந்தமில்லாத கட்சியின் வேறொரவரை தலைமையாக போட்டதும் இந்தத்தேர்தலில் அவர்கள் வேலையில் தொய்வு இருந்ததற்கு ஒரு காரணமாக அப்போதே சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகி இருந்தன.இது நமது மாநாடு இதழிலும் கூட செய்தி வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகள் வெற்றி என அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 9 வார்டுகள், அதிமுக 3 வார்டுகள், திமுக ஒரு இடத்தில வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒரத்தநாடு பேரூராட்சியைக் அமமுக கைப்பற்றுவதாக கூறப்படுகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொறுத்தளவில் மாநகராட்சியில் 22 வார்டுகள், நகராட்சியில் 23, பேரூராட்சியில் 86 வார்டுகள் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக தான் முன்னிலை பெற்று வருகிறது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், அமமுகவை பொறுத்தளவில் மாநகராட்சியில் 1, நகராட்சியில் 8 வார்டுகள், பேரூராட்சிகளில் 37 வார்டுகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதில் ஒருசில இடங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது