மாநாடு 10 August 2022
நேற்று திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடக்கரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார், அப்போது அமைச்சர் வாகனம் பயணிப்பதற்காக உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் காவலரால் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது, அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனம் மற்றும் அவரோடு வந்த வாகனங்கள் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் சென்ற பிறகு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்நிகழ்விற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்திருப்பதாவது : கடந்த 5ம் தேதி, 6ம் தேதிகளில் கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையும் அதன் காரணமாக கரையோரம் உள்ள மக்களை பாதுகாக்க முன்னேற்பாடாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.
அதன்படி கடந்த 5ம் தேதி கல்லணை முதல் அணைக்கரை மதகு சாலை வரை கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார் அதன் பிறகு தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை கீழணை ஆய்வு மாளிகையில் அலுவலர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதால் அணைக்கரை பாலம் வழியாக அமைச்சர் சென்றபோது இந்த நிகழ்வு நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார் மேலும் அணைக்கரை பாலம் ஒரு வழியாக மட்டுமே பயணிக்க கூடிய பாலம் அதனால் நான்கு சக்கர வாகனங்கள் ஒரு புறத்திலிருந்து வரும்போது அதை தடுத்து நிறுத்தி வைத்து விட்டு எதிர்வரும் வருகின்ற வாகனத்தை அனுப்பி அந்த வாகனங்கள் சென்றவுடன் மறுபுறம் உள்ள வாகனத்தை அனுப்புவது வழக்கம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.