Spread the love

மாநாடு 23 March 2025

மண்ணில் வாழும் மரம் , செடி கொடிகள் போன்ற உயிரினங்களுக்கு கூட குறைவின்றி நிறைவான நீரை கொடுக்க வேண்டியது மனிதப் பிறப்பின் அறம்.

உண்மை நிலை அப்படி இருக்க தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட நகரப் பகுதிகள் உருவாவதற்கு முன்பே உருவாகி தெருக்களோடு ஊராய் உயர்ந்து நின்றது கருந்தட்டாங்குடி, அனைத்து அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் முதல் அனைத்து துறை அதிகாரிகளும் இங்கு வாழ்கிறார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது . இங்குதான் உலகமே திரும்பிப் பார்க்கும் பல அரசியல் பிரமுகர்களையும் , அறிவாளிகளையும், மேதைகளையும் உருவாக்கிய கரந்தை தமிழ் சங்கம் உள்ளது என்பது ஒன்றே போதும் கரந்தையின் பெருமையை உலகுக்குச் சொல்ல இவ்வாறு பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய கரந்தை பகுதியில் பல தெருக்களும் சரி இல்லை என்பதை சீர் செய்ய சொல்லி மக்களின் குரலாய் மாநாடு செய்தி குழுமம் மக்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் அவர்களின் தேவையை செய்தியாக சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை உளமாற செய்து கொண்டிருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களும் புரிவார்கள் இதனால் பலன் அடைந்தவர்களும் அறிவார்கள், பல மாதங்களாக பலமுறை சுஜானா நகரில் வாழும் மக்களுக்கு குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதாக பலமுறை நம்மிடம் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறார்கள் அதனையும் இந்தப் பகுதியின் உதவி செயற்பொறியாளராக இருக்கின்ற ஆனந்திக்கு செய்திகளின் மூலம்

தெரியப்படுத்திருக்கின்றோம் என்பதும் அதற்கு அவர் அந்த குறையை சரி செய்வதை விட்டுவிட்டு நம்மிடமே உங்களுக்கு அக்கா, தங்கை இருக்கிறார்களா என்று உறவு முறையை விசாரித்து நான் உடனே சரி செய்கிறேன் என்று ஆதங்கத்துடன் பேசினார் என்பதும் அதன் பிறகு மறுநாளே தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையர் கண்ணன் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆனந்தி உள்ளிட்டவர்கள் அந்த பகுதிக்குச் சென்று இதனை சரி செய்வதாக உறுதியளித்து வந்தார்கள் என்பதையும் இனி எங்களுக்கு நல்ல சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு நம்மிடம் மக்கள் தெரிவித்தார்கள். ஆனால் சமீப காலமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் நடக்கின்ற பணிகளை சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் மனதார பாராட்டி செய்தி வந்ததாக தெரியவில்லை. சிறப்பான பணிகளை நாங்கள் செய்திருக்கிறோம் என்று படம் பிடித்து விளம்பர செய்தி வருவதே வாடிக்கையாகிவிட்டது என்பதை கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ள தஞ்சை மக்கள் நன்கு அறிவர்.
இந்த நிலையில் கருந்தட்டாங்குடி சுஜானா நகர் மக்களுக்கு தொடர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்த சுகாதாரமற்ற துர்நாற்றத்துடன் கூடிய நீரே தான் தொடர்ந்து வருகிறது

காலையிலேயே அந்த நாற்றத்தை தாங்க முடியவில்லை குழந்தை குட்டிகளை வைத்திருக்கிறோம் ஏதாவது நோய்வாய்ப்பட்டு சென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நடந்ததை போன்று எங்களுக்கும் நடந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது, நாங்கள் கட்சிக்காரர்கள் தான் என்ற போதும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது அல்லவா கட்சி எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல கட்சிக்கு நாங்களும் முக்கியம் அல்லவா என்று கவலையுடன் இந்த அவலத்தை எப்படியாவது சரி செய்ய உதவுங்கள் என்றார்கள்.

மாநகராட்சி தரப்பில் இருந்து இதனை சில நாட்களில் சரி செய்து விடுவார்கள் என்று நாமும் பொறுமை காத்தோம் ஆனால் இதுவரை சரி செய்யவில்லை என்பது இன்று சுஜானா நகர் குடியிருப்போர் நல சங்க செயலாளர் தரும.கருணாநிதி நமக்கு அனுப்பிய வீடியோ போட்டோ ஆதாரத்திலிருந்து தெரிகிறது . குடிநீரில் ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் அந்தப் பகுதியின் சுகாதார ஆய்வாளர் , சுகாதார அலுவலர்,

மாநகர் நல அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் நேரில் சென்று முதலில் அங்கு தண்ணீரை ஆய்வு செய்து மாநகராட்சி சார்பில் அங்குள்ள மக்களுக்கு அறிவிப்பு செய்திருக்க வேண்டும் இந்த தண்ணீர் சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது எனவே யாரும் பயன்படுத்த வேண்டாம் சுகாதாரமான நீரை பயன்படுத்துங்கள் என்று முன்னெச்சரிக்கை செய்திருக்க வேண்டும் அந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் இருந்தாவது நல்ல குடிநீரை வாகனத்தில் கொண்டு சென்று தந்திருக்க வேண்டும் என்பதே சரியான போக்காக இருந்திருக்கும், அதை விடுத்து இது நாள் வரை சரி செய்யப்படாத அவல நிலையை சொல்வதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி

ஆணையர் கண்ணனுக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் அலைபேசி எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல அழைத்தால் எடுப்பதே இல்லையாம். மக்களுக்காக உழைக்க மக்கள் பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு மக்களின் உயிர் மீதும் , உணர்வு மீதும் கொஞ்சமும் அக்கறையில்லாமல் இப்படி நடந்து கொள்ளும் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆனந்தி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து மக்களின் குறையை தீர்ப்பாரா? மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழிவகை செய்வாரா ? தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்கிறார்கள் சுஜாதா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர்.
மேலும் : Arasiyal Maanaadu News யூடியூப் சேனலில் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியோடு இன்னும் சில நாட்களில்….
அனைவரும் அறிய : உலக நீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ம் தேதி அன்று நன்னீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், நீர் வளங்களின் நிலையான மேலாண்மையை ஆதரிக்கவும் கொண்டாடப்படுகிறது . 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ.நா) நிறுவப்பட்ட இந்த உலகளாவிய நிகழ்வு, உலகளவில் நீர் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது . இந்த கொண்டாட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 6 உடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

77070cookie-checkதஞ்சாவூர் மாநகராட்சி குடிநீரில் சாக்கடை நீர், நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!