Spread the love

26 March 2025

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கடை பகுதியில் கடந்த 11-08-2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கருணையே இல்லாமல் தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் மனைவி இறந்து போன கொலை வழக்கில்

செங்கபடுத்தான் காடு அதிராம்பட்டினம் ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ராஜேந்திரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்திருக்கிறார் அதன் காரணமாக அவரை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்திருக்கிறது . இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துராமன் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் கொலை குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை இன்று காவலர்கள் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திருக்கிறார்கள்.

77410cookie-checkதஞ்சையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Leave a Reply

error: Content is protected !!