Spread the love

மாநாடு 26 March 2025

தனியார் பேருந்து மற்றும் கோவில் திருவிழா போன்ற இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 12 சவரன் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கடந்த 10.02.2025-ம் தேதி திருவிடைமருதூர் உட்கோட்டம் நாச்சியார்கோவில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் நாச்சியார்கோவிலிருந்து கும்பகோணம் செல்லும் NBS தனியார் பேருந்தில் சென்ற நபரின் கைப்பையில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக திருச்சி மாவட்டம். செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த மஞ்களா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும். அதனைத் தொடர்ந்து கடந்த 25.03.2025-ம் தேதி திருவிடைமருதூர் உட்கோட்டம், திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோவில் திருவிழாவில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க நகையை திருடிச் சென்றதாக திருவாருர் மாவட்டம், சுட்டுக்கரை தெருவைச் சேர்ந்த அவரது தந்தை சுப்பையன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருநீலக்குடி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டும் விசாாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


மேற்படி வழக்குகளை தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் CCTV கேமராக்களை கண்காணித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குற்றவாளியான தஞ்சாவூர் மாவட்டம். மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த 28 வயதுடைய ஈஸ்வரியையும் நாகப்பட்டினம் மாவட்டம் கீழவேளுர் பகுதியைச் சேர்ந்த 28 வயது உடைய ஸ்டாலின் உள்ளிட்டோரை திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மேற்பார்வையில் திருவிடைமருதூர் தனிப்படை பிரிவு காவலர்கள் அடங்கிய குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 12 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் திருவிடைமருதூர் தனிப்படை பிரிவு காவலர்கள் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.

77450cookie-checkதஞ்சையில் நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது

Leave a Reply

error: Content is protected !!