Spread the love

மாநாடு 6 March 2025

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சி ஆர் பி எப் காவலர்களின் துணையோடு சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதா வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டுபிடிக்க இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்திய நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை கட்டிடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும்
தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் தனியார் மதுபான உற்பத்தியாளர்களின் வளாகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள் .
மேலும் சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் அலுவலகமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. மற்றொரு பெரிய மதுபான நிறுவனமான எஸ்என்ஜே டிஸ்டில்லர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த அலுவலகமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட பல இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது அவரின் ஆதரவாளர்கள் இடையே பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சோதனையின் முடிவில் தான் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா எவ்வளவு நடைபெற்று இருக்கிறது என்கிற விவரமும் மேலும் வேறு ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பதும் தெரியவரும்.

இப்படி திமுகவினரே மது ஆலைகள் நடத்தும் போது எப்படி மதுவிலக்கு இந்த மாநிலத்தில் அமலாகும் என்கிறார்கள் மக்கள்.

75750cookie-checkசிக்கிடுவாரா செந்தில் பாலாஜி டாஸ்மாக் தலைமையகத்தில் ED அதிகாரிகள் சோதனை பரப்பரப்பு

Leave a Reply

error: Content is protected !!