மாநாடு 27 March 2025
கவுன்சிலர்கள் சிலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்திருக்கிறார் அதன் பிறகும் தகுந்த விளக்கம் அளிக்காதவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சென்னை மாநகராட்சியின் 5வது வார்டு திமுக கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம் ,189வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல தாம்பரம் மாநகராட்சி சுயேட்சை கவுன்சிலர் ஜெயபிரதீப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் சகுந்தலா திமுகவை சேர்ந்தவர்,இவர் கடந்த ஆண்டு திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.