Spread the love

மாநாடு 2 April 2025
தஞ்சாவூர் மாநகராட்சியோடு சேர்க்க பட்டிருப்பதாக அறிவிப்பு வந்துள்ள பகுதியான தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள

தமிழ் பல்கலைக்கழக குடியிருப்பு, சிந்தாமணி வீட்டு வசதி வாரியத்தில் சி – பிளாக்கில்
ஏறக்குறைய 200 குடும்பங்கள் வாழ்வதாகவும், 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழும் மக்களுக்கு குடிநீர் கொடுக்க அமைக்கப்பட்ட கீழ்நிலை நீர தேக்க தொட்டியை இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு முறை தான் சுத்தம் செய்தார்களாம் , எப்போதாவது யாராவது கேள்வி எழுப்பினால் மட்டும் வந்து குளோரின் பவுடர் போடுவார்களாம்.

இந்தத் தண்ணீர் வரும் குடிநீர் குழாயில் புழு வந்ததாம் அதனையும் புகாராக தெரிவித்தார்களாம், இந்தக் குடிநீர் கீழ்நிலை தொட்டிக்கு மூடி எதுவும் இல்லாததால்

குழந்தைகள் முதல் கால்நடைகள் வரை விழுந்து உயிர் பலியாகும் அபாயம் உள்ளதாகவும் ஏற்கனவே இந்த தண்ணீர் தொட்டியில் நாய் செத்து மிதந்ததாகவும் இதனையும் புகாராக தெரிவித்ததாகவும் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் உட்பட அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு

“மாநாடு செய்தி குழுமத்திற்கு தங்களது மனக்குமுறலை தெரிவித்தார்கள். 
மீண்டும் இன்னொரு முறை சம்பந்தப்பட்டவர்களுக்கு உங்களது கோரிக்கையை, வாழ்வாதாரத்திற்கு சுகாதாரமற்ற குடிநீரால் உயிர் வாழ அச்சுறுத்தலாக இருக்கும் இந்த இழிநிலையை எடுத்து கூறுங்கள் மனச்சான்று உள்ளவர்களாக இருந்தால் மக்களை மன்றாட விடாமல் சரி செய்து விடுவார்கள் அதன் பிறகும் இந்த இழிநிலை அப்படியே இருந்தால் பிறகு என்னிடம் கூறுங்கள் நாங்கள் வருகிறோம் களத்திற்கு வந்து நேரடியாக அங்கு உள்ள நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்று கூறினோம்.

 

பல மாதங்கள் ஆன பிறகும் இதுவரைக்கும் சரி செய்யவில்லை அதற்கான முயற்சி கூட எடுக்கவில்லை இந்த இடத்திற்கு அருகில் வந்து குழி பறித்தார்கள் அதுவும் அப்படியேதான் கிடக்கிறது குடிநீர் சேமிக்க தொட்டி கட்டுவதாக கூறப்பட்டதும் கிடப்பிலேயே கிடக்கிறது ஒருவேளை குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்ததாக கணக்கு காட்டி பணத்தை சுருட்டி விட்டார்களா ? என்ற சந்தேகமும் இருக்கிறது என்ற மக்கள்

பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்ட போதெல்லாம் கண்டுகொள்ளாமல் ஏதாவது காரணம் சொல்லி அலட்சியமாக எங்களை நடத்தினார் குடிக்க நல்ல சுகாதாரமான குடிநீர் தர வேண்டும் என்ற நோக்கம் கூட இல்லாமல் எங்களை நோகடித்தார். ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கேட்டால் ஹவுசிங் போர்டு தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று கை காட்டுவார்கள் அவர்களிடம் கேட்டால் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் இடங்களுக்கு அவர்கள் தான் அதனை செய்ய வேண்டும் என்று மாத்தி மாத்தி எங்களை அலைக்கழித்தார்கள் ஆனால் இதுவரைக்கும் எங்களது தவிச்ச வாய்க்கு தரமான தண்ணீர் கிடைக்கவில்லை இப்போது ஊராட்சி மன்றத்தில் கேட்டால் தலைவர் பதவி முடிந்து விட்டது என்று காரணம் கூறுகிறார்கள் எனவே தான் நாங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எங்களது கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளோம் அதை

“மாநாடு”செய்தி குழுமத்திற்கும் பதிவு தபாலில் அனுப்பி இருந்தார்கள் . அதன் அடிப்படையில் நேற்று

சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் மனக்குமுறலை, அவர்கள் சுட்டிக் காட்டிய குடிநீர் தொட்டியையும் அது கிடக்கும் அவல நிலையையும் வீடியோ காட்சிகளாகவும் , புகைப்படக் காட்சிகளாகவும் பதிவு செய்தோம் அதனையும் இங்கு பதிவிடுகிறோம்

பார்ப்பவர்களுக்கு பதப்பதைக்கும் விதத்தில் இருக்கிறது அந்த மக்கள் அன்றாடம் குடிக்கும் குடிநீர் கொடுக்கும் கீழ்நிலை குடிநீர் தொட்டி கட்டடம் எப்போது எந்த நேரத்தில் இடிந்து விழும் என்று யாரும் கணிக்க முடியாத அளவிற்கு இருப்பதும், குடிநீர் கிடக்கும் தொட்டி மூடப்படாமல் திறந்து கிடப்பதும் , இந்தக் குடிநீர் தொட்டி கட்டிடத்திற்கு எவ்வித கதவு கூட இல்லாமல் இருப்பதும் அவலத்தின் உச்சம் என்று சொல்லலாம். இதனைக் கூட மக்கள் மன்றாடி கேட்டும் இதுவரை செய்யாமல் அவல நிலையில் இத்தனை ஆண்டுகளாக வைத்திருந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உண்மையிலேயே உளமாற மக்களுக்கு சேவையாற்ற தான் வந்தார்களா என்பது ஆயிரம் மடங்கு கேள்விக்குறியாக தான் இருக்கிறது. கடந்த மாதம் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது அதன் நோக்கமே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ,உயிரினத்திற்கும் நன்னீர் கொடுக்க வேண்டும் என்பதுதான் . தஞ்சாவூர் மாநகராட்சி கருந்தட்டாங்குடியில் சில நாட்களுக்கு முன்புதான் பல மாதங்களாக குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு நீர் கலந்து வந்ததை செய்தியாக வெளியிட்டோம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநாடு டிவி ஊடகத்தின் மீது சங்கடப்பட்டார்களாம். அதன் பிறகு தினந்தோறும் ஆய்வு செய்து மூன்றே நாட்களில் எங்கிருந்து சாக்கடை கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டு அறிந்து அதனை சரி செய்து விட்டார்கள் என்று அந்த மக்கள் நம்மிடம் கூறி மாநாடு செய்தி குழுமத்திற்கு நன்றி தெரிவித்ததையும் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். நமக்கு எழும் கேள்வி மூன்று நாட்களில் செய்ய முடிந்ததை ஏன் பல மாதங்களாக செய்யாமல் இருந்தார்கள் இந்த அதிகாரிகள் என்பது தான் ? 
அதேபோல தான் இந்த தமிழ் பல்கலைக்கழக வளாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் கூறியுள்ளபடி பார்த்தால் 20 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை தான் இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தவுடன் அதிர்ந்து போனோம். களத்திற்கு நேரடியாக சென்றோம் மக்களின் மனக்குமுறலை பதிவு செய்து இருக்கிறோம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்

துன்பப்படும் மக்களின் துயர் துடைப்பதை தொடர்ந்து மாநாடு செய்தி குழுமம் கவனித்து வருகிறது அதன்படி இந்த மக்களின் துயரையும் துடைப்பார்கள் என்று நம்புகிறது, மக்களின் பேட்டி வீடியோ -Manadu TV சேனலில் செல்போன் மற்றும் இணையத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/7XdfsPLm2Mc

77710cookie-checkகுடிநீர் குழாயில் புழு வந்துச்சு, நாய் செத்து கிடந்துச்சுங்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சரி செய்வாரா? ஏக்கத்தில் மக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!