மாநாடு 2 April 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலி செயினை பறித்தவனை குறி வைத்து தட்டி தூக்கி கைது செய்த காவலர்களை வெகுவாக பாராட்டியுள்ளார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடந்தது எங்கு நடந்தது என்பது பார்ப்போம்:
கடந்த 3.03.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட மதுக்கூர் காவல் நிலையத்திற்குட்பட்ட அண்டமி கண்ணன் ஆற்று பகுதியை கடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத நபர் தன்னை பின்தொடர்ந்து வந்து அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றதாக மண்டலக்கோட்டை, கிழத்தெருவைச் சேர்ந்த வித்யா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுக்கூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் மதுக்கூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தண்டபாணி தலைமையில் பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு CCTV கேமராக்களை கண்காணித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான
திருவிடைமருதூரைச் சேர்ந்த இசாத் அகமது மற்றும் முகமது ஜலாலுதீன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 5 சவரன் தாலி செயினை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்த பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர், மதுக்கூர் காவல் ஆய்வாளர் மற்றும் பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.