Spread the love

மாநாடு 12 March 2025

அம்மாபேட்டை பகுதியிலுள்ள புதியசக்தி என்ற தனியார் வங்கி நிறுவனத்தில் ஏறக்குறைய

100 பவுன் தங்க நகைகளை சுற்றுவட்டார மக்கள் அடகு வைத்துள்ளதாக கூறப்படுகிறது கடந்த நான்கு மாதங்களாக நிறுவனம் திறக்கபடவில்லை என்றும் நிறுவனத்தின் மேலாளர்

மெலட்டூரை அடுத்த ஏர்வாடி பகுதியை சேர்ந்த காத்தையன் நகையை, பணத்தை கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக சொல்லி தனியார் வங்கியை நம்பி தங்க நகைகளை அடமானம் வைத்த மக்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்துள்ளனர் .

ஏற்கனவே பெறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில்  புதியசக்தி நிறுவனத்தை சார்ந்த கார்த்திக், புண்ணியமூர்த்தி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்

எவ்வளவு பொருட்கள் ஏமாற்றப்பட்டது என்பதும் எத்தனை நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்  உண்மையில் நடந்தது என்ன திட்டமிட்டு பொதுமக்கள் ஏமாற்றப்பட்டார்களா? என்பதும் விசாரணை முடிவில் தெரியவரும். இதன் முழு செய்தியையும் மாநாடு செய்தி குழுமம் தொடர்ந்து வெளியிடும்.

76090cookie-checkதஞ்சையில் தனியார் வங்கியை நம்பி ஏமாந்து விட்டோம் காவல் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!