மாநாடு 19 April 2025
நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுதலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் பேசியதாவது; தஞ்சாவூர் மாவட்டம் இந்தியாவிற்கே உணவளிக்கக் கூடிய தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பெருமை பெற்ற மாவட்டமாகும். கரிகால் சோழன் கட்டிய கல்லணை , காவிரியின் பரந்து விரிந்த பாசன வாய்க்கால்கள் , ஆறுகள் நிறைந்த வயல் வெளிகள் கொண்ட சோழ மன்னன் கட்டிக்காத்த பெருமையை தன்னகத்தே கொண்டது தஞ்சை மாவட்டம் .
இந்த மண்ணில் மரக்கன்றுகள் நடும் விழா நீதித்துறை , நிர்வாகத்துறை இணைந்து சட்டப் பணிகள் ஆனை குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக சிறப்பாக நடைபெற்றது . மரக்கன்றுகள் நடும் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் , வனத்துறை , நெடுஞ்சாலை துறை மற்றும் காவல்துறை அலுவலர்களையும்,
பாராட்டுகிறேன் என்று வாழ்த்தி பேசினார்.
இவ்விழாவையொட்டி
தஞ்சை புதுக்கோட்டை சாலையில் கமலா சுப்ரமணியன் பள்ளி அருகில் நெடுஞ்சாலைதுறை சார்பிலும் , தஞ்சை பிள்ளையார்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
செய்தி – தஞ்சை N.செந்தில் குமார்