மாநாடு 21 April 2025
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார்.அவருக்கு திவாகர் மற்றும் சுந்தர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் முத்த மகனான திவாகர் சிரமேல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகன் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 26.10.2024-ம் தேதி தனது முத்த மகனுக்கு ஸ்காலர்சிப் ரூ.14,000/- வந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து பேசுவதாக கூறி தனது தொலைபேசி (9870225934) என்ற எண்ணிற்கு G-Pay மொபைல் எண்ணை அனுப்புமாறு கூறி Account -ல் இருந்த ரூ.35,113/- தொகையினை திருடிவிட்டதாக சிரமேல்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி வழக்கு பதிவு செய்தார் மேற்படி வழக்கை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அறிவழகன் விசாரணை செய்து வந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் கூடுதல் இயக்குநர் சந்திப் மிட்டல் இ.கா.ப உத்தரவின்படி தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் ஷ்யனாஸ் இ.கா.ப , தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் த.கா.ப. ஆகியோர் வழிக்காட்டுதலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ், தஞ்சாவூர் மாவட்ட சைபர்
கிரைம் காவல் உதவி ஆய்வாளர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் சென்னை தலைமையிடத்து சையர் கிரைம் காவர்கள் ராஜசேசர், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் வழக்கின் குற்றவாளிகளான
டெல்லியைச் சேர்ந்த அக குமார் (வயது-30), சபம் குமார்(வயது-22) மற்றும் அனுஜ் குமார் ஜா (வயது-22) ஆகியோண 17.04.2025-ம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்கிருந்து வழிக்காவல் எடுத்து வந்து இன்று 21.04.2025 சென்னையை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி வழக்கினை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினரையும், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமயிலான காவல்துறையினரையும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேலும் இது போன்ற பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஸ்காலர்சிப் வழங்குவதாக பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் இருக்கும் நபர்களின் உண்மைத் தன்மை தெரியாமல் பொதுமக்கள் யாரும் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். தஞ்சாவூரில் ஏமாற்றி விட்டு டெல்லியில் இருந்தாலும் தட்டி தூக்கிய தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு மக்களின் சார்பாக மாநாடு செய்தி குழுமத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Interesting perspective! It gave me a new way of thinking about this topic.
Thanks for the valuable information. It was easy to understand and super useful.