மாநாடு 02 May 2025
சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 1207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு :
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி நேற்று 1.05.2025 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் மது பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் ஒரத்தநாடு உட்கோட்டம் திருவோணம் காவல் நிலையத்திற்குட்பட்ட ஊரணிபுரம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்ட திருவோணம் வெட்டுவக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் திருவோணம் புதுவிடுதியைச் சேர்ந்த அரவிந்தன் ஆகியோரை கைது செய்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 861 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் பேராவூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பசுபதி தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் சித்தாதிக்காடு டாஸ்மாக் கடைக்கு அருகில் சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தைச் சேர்ந்த சிவசீலன் பேராவூரணியைச் சேர்ந்த இளையராஜா பேராவூரணியைச் சேர்ந்த பெருமாள் மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 167 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டும் மற்றும் மதுக்கூர் காவல் நிலையப் பகுதியில் பட்டுக்கோட்டை உட்கோட்ட சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினரால் மதுக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்ட மதுக்கூரைச் சேர்ந்த பெருமையன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்கால் கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திருவோணம் காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார், மதுக்கூர் காவல் நிலைய காவல உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், பட்டுக்கோட்டை உட்கோட்ட தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் பேராவூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பசுபதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Great read! I really enjoyed your perspective on this topic.