மாநாடு 05 May 2025
தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து மாயமான சிலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவரின் பாஸ்போர்ட்டை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது விபரம் பின்வருமாறு,
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பொன்மாணிக்கவேல் இருந்தபோது சிலை கடத்தல் வழக்கில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்ட தீன தயாளனை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க உதவியதாக சிபிஐ பொன்மாணிக்கவேல் மீது வழக்கு தொடர்ந்தது அதனையொட்டி பொன்.மாணிக்கவேல் முன் ஜாமின் கேட்டிருந்ததற்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணையின் போது சிபிஐ தரப்பிலிருந்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பொன்மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதால் வழக்கின் விசாரணை தடை படுகிறது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலை தாக்கல் செய்யவும் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.