மாநாடு 07 May 2025
நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம்
இவர் இதற்கு முன் துனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் நேற்று உதகை பாலிடெக்னிக் அருகே
வாடகை வீட்டில் வசித்து வரும் ரஷ்யா பேகம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் தூனேரி கிராமத்தில் தனது தம்பி பெயரில் வீடு கட்டி உள்ளதாகவும், அதேபோல் தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் வீடு மற்றும் கார் வாங்கியுள்ளதாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது, விஏஓ ரஷ்யா பேகம் தனது பதவியை பயன்படுத்தி 50 லட்சத்திற்கும் மேல் ஊழல் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.