மாநாடு 09 May 2025
தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காமராசர் முதலமைச்சர் ஆக இருந்தபோது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பொறுப்புணர்வோடு பார்த்து பார்த்து கட்டப்பட்டது.
நிலப்பரப்பு ஏறக்குறைய 110 ஏக்கர் நிலத்தை அன்று மக்களின் நலன் கருதி கொடுத்தனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறது, காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஆனால்
சமீப காலமாக வேலை நடைபெறுவதாக கட்டிடங்கள் கட்டப்படுவதாக ஏனோ தானோ என்று கட்டுமானங்களை செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல் தங்களுக்கு ஒதுக்குவதையே குறிக்கோளாக கொண்டிருப்பதால் நடக்க சரியான பாதையும் இல்லை
குண்டும் குழியுமாக குளம் போல இருக்கிறது
மழைக்காலங்களில், வெயில் காலங்களில் பள்ளத்தாக்கில் நடப்பது போல பள்ளம் மேட்டில் தான் நடக்க வேண்டி இருக்கிறது, குடிக்க குடிநீரும் இல்லை நோயாளிகள் படுத்து மருத்துவம் பார்க்க போதுமான அளவு படுக்கைகளும் இல்லை ,
செவிலியர்கள் பற்றாக்குறையும் இருப்பதாக தெரிய வருகிறது, இதையெல்லாம் சுட்டிக்காட்டி தொடர்ந்து மாநாடு செய்தி குழுமம் டாக்டர் பாலாஜி நாதன் டீனாக இருந்த காலம் தொட்டு மக்களின் மீது கொண்ட அக்கறையால் ஆதாரங்களோடு செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் அனைத்தையும் சரி செய்வதாகவும் உடனடியாக பொதுப்பணித்துறையை கூப்பிட்டும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கூப்பிட்டு சரி செய்வதாக கூறினாரே தவிர எதையும் சரி செய்த பாடு இல்லை ஏட்டில் மட்டும் நிறைய செய்ததாக காட்டிக் கொண்டார் அவரும் பனிஷ்மென்ட்டோடு பணி ஓய்வு பெற்று சென்று விட்டார் ஆனாலும் எப்போதுமே பல கோடிகளை ஒதுக்கி புதிது புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டதாகவும் ,மருத்துவமனையில் வேலைகள் நடைபெறுவதாகவும் , அவ்வப்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகார மிக்கவர்களை கூப்பிட்டு அனைத்து ஆதரவு பத்திரிகைகளிலும் வருமாறு விளம்பரங்கள் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல தற்போதும் தஞ்சாவூரில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஏறக்குறைய 11 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடைபெற்றதாகவும், இதனை தொடங்கி வைக்க இந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்ரமணியன் வருவதாகவும் அறிவிக்கப்பட்டு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அமைச்சர் வந்து தொடங்கி வைப்பதாக தெரிய வருகிறது. சமூக ஆர்வலர்கள் வேண்டி விரும்பி கேட்பதெல்லாம் உண்மையிலேயே உளமாற மக்களுக்கு பயன்பட தான் இங்கு பணிகள் நடக்கிறது என்றால் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்று நினைத்தால் அமைச்சர் மா.சுப்யமணியன் ஒவ்வொரு Gate பாதை வழியாக நடந்து பார்வையிட வேண்டும். ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம் அமைச்சர் சம்மதித்தால் நாங்களே மாநாடு செய்தி குழுமத்தின் சார்பாக அங்கிருக்கும் குறைகளை வந்து காட்ட தயாராக இருக்கிறோம். அதற்கு முன்மாதிரியாக தான் இங்கு நேற்று எடுத்த சிறிய காணொளிகளையும் புகைப்படங்களையும் ஆதாரமாக வைக்கிறோம். பழைய கட்டிடங்கள் ஆரம்பத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் இன்று வரை எவ்வளவு தரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது என்பதையும், இப்போது பல இடங்களில் பார்க்கப்படும் கட்டுமானங்களும் பேச் வொர்க்கையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும், யார் வீட்டு சொந்த பணத்திலும் இங்கு கட்டுமானங்கள் கட்டமைப்புகள் செய்யப்படுவது அல்ல. மக்களின் பணத்தில் இருந்து தான் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் உணர்ந்து உடனடியாக சரி செய்ய வேண்டும். தவறினால் தொடர்ந்து மாநாடு மக்களின் முன்னால் செய்திகளை கொண்டு செல்லும். சீனி சக்கர சித்தப்பா சீட்டில் எழுதி நக்கப்பா என்பது போல பணிகள் நடக்காமல், அதையும் திறந்து வைத்து விளம்பரப்படுத்தாமல், உண்மையான அக்கறை கொண்டு உளமாற மக்கள் பணியாற்றிட வேண்டும் , ஆண்டு பல ஆனாலும் ஆண்டவர்களின் பெயர் சொல்லும் அளவிற்கு பணிகள் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.