மாநாடு 15 March 2025
நாட்டில் மாடுகளிடம் இருந்து மக்களை காப்பதில் கூட மெத்தனம் காட்டுகிறது அரசு நிர்வாகம் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு அசம்பாவித நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது ஆனாலும் கூட அரசு அதிகாரிகள் அக்கறையோடு அப்பிரச்சனைகளை தீர்க்க முற்பட்டார்களா ? என்பது ஆயிரம் மடங்கு கேள்வியாகவே தான் உள்ளது மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் முற்பட்டிருந்தால் .. நேற்று மாடு முட்டி தூக்கி எறிந்து இருக்காது அந்த குழந்தையின் தாயை.
இச்சம்பவம் எங்கு நடந்தது என்பதை பார்ப்போம்.
மகளிரின் பாதுகாப்பை வைத்து அறிந்து கொள்ளலாம் அந்த மாநிலம் மக்களுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்று அதேபோல தான் மாவட்டங்கள் எப்படி இருக்கிறது என்பதை அந்த மாநிலத்தின் தலைநகரின் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகராட்சியில் மற்ற பிரச்சனை வெட்ட வெளிச்சத்துக்கு வருவதற்கு நாளானாலும்
நன்றி நாட்டு நடப்பு
மாடுகள் சாலைகளில் சுற்றுவதும் மாடுகள் முட்டி மனிதர்களை அலற விடுவதும் சாதாரண நிகழ்வாகவே நடந்து வருகிறது சாலைகளில் சுற்றும் மாடு முட்டி பலரின் உயிர்களும் கூட போயிருக்கிறது என்பதை இப்போதும் நினைவுபடுத்துகிறோம். நினைவுக்கு கூற வேண்டுமென்றால் கடந்த அக்டோபர் மாதம் 2023 ஆம் ஆண்டு சென்னையில் மாடு முட்டி படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது என்னவெனில் மாடுகளை பிடிக்க செல்லும் மாநகராட்சி பணியாளர்களை மாட்டின் உரிமையாளர்கள் மிரட்டுகிறார்கள் என்றார்கள் இனிவரும் காலங்களில் மக்களுக்கு மாடுகளால் அச்சுறுத்தல் வரும் சமயத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டின் உரிமையாளர்கள் மிரட்டுகிறார்கள் என்று சாக்கு சொல்லும் விதத்தில் கூறிய சென்னை மாநகராட்சிக்கு அப்போதே சிலர் “மாட்டின் உரிமையாளர்கள் மிரட்டுகிறார்கள் என்றால் அரசின் போலீஸ் எதற்கு பூப்பறிக்கவா இருக்கிறது” என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
சாலைகளில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த தவறும் நகராட்சி , மாநகராட்சி அதிகாரிகளால் மக்கள் மரண பயத்திலேயே சாலைகளில் செல்ல வேண்டி இருக்கிறது . நேற்று சென்னை கொளத்தூரில் தனது
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாடுகளும், கட்டுப்படுத்த தவறும் மாநகராட்சி அதிகாரிகளும் வீடியோவை காண லிங்க்:
https://youtu.be/TNTuJ_dg28c?si=oqnseFjP2cdXRDHa
குழந்தையின் கையைப் பிடித்து ஒரு தாய் அழைத்து வந்து கொண்டிருந்த போது சாலையில் நின்றிருந்த மாடு தாய் அழைத்துவந்த பெண் குழந்தையை நோக்கி முட்ட வருவதை கவனித்த தாய் தனது குழந்தையை முட்ட வந்த மாட்டின் முன் நின்று எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று தாய் நடத்திய பாசப் போராட்டம் பார்ப்பவர்களின் மனசாட்சியை கசக்கி பிழிகிறது .
நன்றி நியூஸ்18 தமிழ்நாடு
இருந்த போதும் குழந்தையின் தாயை மாடு முட்டி தூக்கி எறிவது அந்த வீடியோவில் நன்றாகவே தெரிகிறது சாலையில் பயணித்தவர்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்த மாடு விரட்டப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதம் நடந்து முடிந்த பிறகு அந்த மாட்டின் உரிமையாளர் யார் என்ற விசாரணையில் இறங்கியுள்ளார்கள் சென்னை மாநகராட்சி தரப்பினார் . இந்த சம்பவம் நடந்த அந்தப் பகுதியின் மாநகராட்சி அலுவலரை பிடித்து மாடுகளை சாலைகளில் சுற்ற விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததற்கு கடுமையான தண்டனையை வழங்கியிருக்க வேண்டும் இந்நேரம் அப்படி செய்தால்தான் இனி இப்படி இங்கு மட்டுமல்லாமல் எங்கும் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் மாநகராட்சி அலுவலர்கள் …
தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் மாடுகள் நிறைந்து திரிகிறது என்பதை கண் உள்ளவர்கள் அனைவருமே காண முடியும். இதனை சுட்டிக்காட்டி மாநகராட்சி சரியான முறையில் மக்களை பாதுகாக்கும் விதத்தில் நடக்க வேண்டும் என்பதற்காக மாநாடு செய்தி குழுமம் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறது செய்தி வந்த சில நாட்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் , அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி பகுதி மக்களின் சுகாதாரத்தை பேணி காப்பதற்காக பணியாற்றுவதாக நினைக்கும் மாநகராட்சி சுகாதார அலுவலர் பொன்னர், போன்றவர்கள் மாடுகளின் பக்கத்தில் நின்று போட்டோக்கள் எடுத்து பத்திரிக்கைகளுக்கு செய்திகள் கொடுத்துவிட்டு தங்களுக்குத் தேவையான சம்பளமும், மேற்படியும் வாங்கிக்கொண்டு கடந்து செல்வதும் தொடர்ந்து மாடுகள் சாலைகளில் சுற்றுவதும் தஞ்சாவூர் மாநகராட்சியில் வாடிக்கையாக இருக்கிறது.
இதனை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அதிகாரிகள் செய்யும் தவறுக்கு ஆளும் கட்சிக்கு ஆப்படிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதுதான் ஆளும் கட்சியினர் உணர்ந்து அதிகாரிகளின் வேலையை சரியாக பார்க்க வைப்பார்கள் என்கிறார்கள் …