Spread the love

மாநாடு 02 June 2025

சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 123 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார்

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் நேற்று 01.06.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கவேல் நகர் 2 வது தெருவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து டீ மற்றும் காபித்தூள் விற்பனை செய்வதை போல் குட்கா விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனவேந்தன் தலைமையிலான பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை காவலர்கள் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் பட்டுக்கோட்டை சஞ்சை நகரைச் சேர்ந்த 40 வயது உடைய

டெல்பின்ரமேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த சுமார் 123 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. தனவேந்தன் மற்றும் பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை காவலர்கள் அடங்கிய குழுவினரை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

81240cookie-checkதஞ்சாவூர் மாவட்டத்தில் 123 கிலோ குட்கா பறிமுதல் குற்றவாளி அதிரடி கைது

Leave a Reply

error: Content is protected !!