மாநாடு 10 June 2025
இன்று மதியம் 1:30 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நகரப் பகுதியில் TN 14 – 7662 பதிவெண் கொண்ட மகேந்திரா XUV நான்கு சக்கர வாகனத்தில் குட்கா போதை பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆகியோர் மேற்கண்ட வாகனத்தை அடையாளம் கண்டு அதை நிறுத்த முற்படும்போது
மேற்கண்ட மகிழுந்தை ஓட்டி வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் என்ற நபர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். அதை ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த காவல்துறையினர் அந்த மகிழுந்தை சோதனை செய்தபோது சுமார் 100 கிலோ அளவிலான குட்கா போதை பொருள் காரின் டிக்கியில் வைக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து பட்டுக்கோட்டைக்கு
சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவருடைய வாக்கு மூலத்தின் பேரில் காரில் வந்த கடத்தலுக்கு துணையாக இருந்த குஜராத்தை சேர்ந்த ராஜு சிங் என்பவரையும் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள்
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு டெலிவரி செய்வதற்காக பெங்களூரில் இருந்து மேற்கண்ட பொருட்கள் எடுத்து வந்தது தெரிய வந்தது. மேற்கண்ட ரமேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.