Spread the love

மாநாடு 12 June 2025

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூரில் 91 ஆம் ஆண்டு நடைபெற உள்ள கருட சேவைக்கான அழைப்பிதழை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள முருகானந்தம் சுற்றுலா துறை அலுவலர் சங்கர்,மேயர் சண். ராமநாதன், தியாகராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டவர்களிடம்

அழைப்பிதழ் வழங்கி வரவேற்றார் ஆடிட்டர் ரவிச்சந்திரன் மேலும் விழா நாளான அன்று பொது விடுமுறை 16/6/2025 விடக் கோரியும் ஒரே இடத்தில் கருட சேவை அமைப்பதற்கான அனுமதி வேண்டி கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் வருகின்ற 15, 16 தேதி இரண்டு நாட்களும்  தஞ்சையில் பயணம் அமைந்துள்ளதால் முதல்வரையும் அவர்களின் குடும்பத்தினரையும் இந்த விழாவிற்கு அழைத்துள்ளோம் என்றார் ஆடிட்டர் ரவிச்சந்திரன். மேலும் அனைத்து முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் கருட சேவை பத்திரிகை தந்து அழைக்கும் பணியில் ஆடிட்டர் ரவிச்சந்திரன் அழகிய தஞ்சை திட்ட இயக்குனருடன், அழகிய தஞ்சை பொருளாளர் சங்கரும் உடன் இருந்து வரவேற்றுள்ளார்.

செய்தி -N.செந்தில் குமார்.

81580cookie-checkதஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற கருட சேவை, முதல்வருக்கு அழைப்பு

Leave a Reply

error: Content is protected !!