Spread the love

மாநாடு 9 July 2025

மாநகராட்சியில் மக்களின் பணம் வீணடிக்கப்படுவது தெரிந்திருந்தும் பலரும் வேலைப்பளுவின் காரணமாக இது நமது வேலை இல்லை என்று ஒதுங்கி செல்கின்றனர் வரி வசூல் செய்பவர்கள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் மாநகராட்சி பணத்தில் மஞ்ச குளித்திருப்பது மதுரை மாநகராட்சியில் நடைபெற்று இருக்கும் பல கோடி மோசடி மூலம் மக்களுக்கு தெரிகிறது. இதனை தடுக்கும்

போக்கில் சமூக ஆர்வலர்கள் யாராவது தகவல் கேட்டால் கூட ஊழல் பேர்வழிகள் ஒன்று சேர்ந்து கொண்டு தகவலை தராமல் ததிங்கினத்தோம் தாளம் போட்டு போக்கு காட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் தஞ்சாவூர் மாநகராட்சியிலும் இதே நிலைதான் தொடர்கிறது அதனைப் பற்றி விரைவில் முழுமையாக பார்ப்போம். தற்போது பல கோடி மோசடி நடந்துள்ள மதுரை மாநகராட்சி விபரம் பின்வருமாறு : மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அனைத்து மண்டல தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சியில் வீடுகள், கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார்கள். விசாரணையில் மதுரை

மாநகராட்சியின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் 3வது மண்டலத்தின் தலைவரான பாண்டிசெல்வியின் உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
மேலும் திமுகவின் மண்டல குழு தலைவர்களான சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, சுவிதா ஆகியோரிடமும் அவர்களது கணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஜூலை 7-ந் தேதி மாலை சென்றனர். இவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மா.செ. மணிமாறனும் சென்றிருந்தனர்.
சொத்து வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி, மண்டல தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் என பலரிடமும் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறது அமைச்சர்கள் குழு.
இதன் பிறகு மண்டல குழு தலைவர்களான சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா மற்றும் விசாரணைக்கு அழைக்கப்படாத மண்டல குழு தலைவர் வாசுகி ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அமைச்சர்கள் குழுவிடம் கொடுத்துள்ளனர். இதேபோல நிலைக்குழுவின் உறுப்பினர்களான கண்ணன், மூவேந்திரன் ஆகியோரும் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துள்ளனர். மேலும் மேயர் இந்திராணிக்கு அமைச்சர்கள் குழு கடும் எச்சரிக்கையை விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், கடந்த மாதம் திமுகவில் இருந்தே நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் மேயர் இந்திராணி மீதும் எந்த நேரத்திலும் நடவடிக்கை பாயலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே சொத்துவரி மோசடி விவகாரத்தில் தற்போது ராஜினாமா செய்துள்ள மண்டல தலைவர்களில் 4 பேர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சீட்டிங் செய்தவர்கள் சிக்குவார்களா? 

82420cookie-checkமாநகராட்சியில் பல கோடி மோசடி, திமுகவுக்கு நெருக்கடி, மண்டல தலைவர்கள் ராஜினாமா
One thought on “மாநகராட்சியில் பல கோடி மோசடி, திமுகவுக்கு நெருக்கடி, மண்டல தலைவர்கள் ராஜினாமா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!