Spread the love

மாநாடு 29 July 2025

செக் கொடுத்து மோசடி செய்த நபருக்கு சிறை தண்டனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் அருகே உள்ள மஞ்சுநகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் . இவர் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராமானுஜம் இந்து நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஒட்டநத்தத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சுதா இருவரும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுதாவிடம் ராதாகிருஷ்ணன் 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தான் வாங்கிய கடனுக்கு ராதாகிருஷ்ணன் 4.2.2023 தேதியிட்ட தலா ரூ.5 லட்சத்துக்கான 2 காசோலைகளை சுதா தம்பதியரிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை சுதா வங்கியில் செலுத்தியபோது 9.2.2023-ல் பணம் இல்லை என திரும்ப வந்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் சுதா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் ராதாகிருஷ்ணனுக்கு 6 மாத சிறை தண்டனையும் 9 சதவீத வட்டியுடன் 10 லட்சத்தை சுதாவுக்கு திருப்பித் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

82630cookie-checkகடன் பெற்று கம்பி நீட்ட நினைத்தவர் கம்பி எண்ண வேண்டும் நீதிமன்ற உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!