மாநாடு 20 March 2025
விழுப்புரம் காகுப்பத்தைச் சேர்ந்தவர் காத்தமுத்து கட்டட தொழிலாளி கடந்த 2016ம் ஆண்டு இவரது தந்தை அபிமன்னன் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார் அபிமன்னனின் இறப்பு சான்றிதழ் கேட்டு காத்தமுத்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதனையொட்டி காத்தமுத்து சில நாட்களுக்கு முன் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இறப்பு பதிவு அலுவலர் – துப்புரவு ஆய்வாளர் மதன்குமார் என்பவரை அணுகியுள்ளார் அப்போது நான் இறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் எனக்கு நீங்கள் 10,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கராராக கூறியிருக்கிறார் துப்புரவு ஆய்வாளர் மதன்குமார். பெத்தவரை சாக கொடுத்துவிட்டு வந்து நிற்கிறோம் நாம் ஏன் மற்றவருக்கு லஞ்சம் தர வேண்டும் என்று எண்ணிய
காத்தமுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் அவர்கள் விரித்த வலையில் வசமாக சிக்க போவது தெரியாத துப்புரவு ஆய்வாளர் மதன்குமார் நேற்று முன்தினம் மதியம் காத்தமுத்து வீட்டிற்கே சென்று லஞ்ச பணம் 10,000 ரூபாயை பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் மதன்குமாரை கையும், களவுமாக கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூரில் பிறப்புச் சான்றிதழ்களில் நடந்த முறை கேடுகள் மற்றும் இறப்புச் சான்றிதழில் செய்யப்பட்ட தில்லாலங்கடி வேலைகளையும் தில்லாக மாநாடு செய்தி குழுமம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது என்பதும் அவர்களை காப்பாற்ற அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள் அதிகாரிகள் என்பதும் தவறு செய்தவர்களும், தவறு செய்தவர்களை காக்க துணையாக நிற்பவர்களும் விரைவில் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.