Spread the love

மாநாடு 27 August 2025

ஊழல் செய்து சொத்து சேர்த்து விட்டோம் நம்மை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அரசு பணியில் உள்ள பல அலுவலர்களுக்கும், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டோம் இனி நம்மை யாரும் சீண்ட கூட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த, இருக்கின்ற ஊழல் முறை கேட்டில் அரசு பணத்தை ஆட்டைய போட்ட அரசு அலுவலர்களை ஊழல் ஊழ்வினை போல துரத்தும், லஞ்ச ஒழிப்புத்துறை வேலையில் இருந்து சென்றவர்கள் மீது வழக்கு போட்டு பிடிக்கும் வேலையை செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வாரத்திலேயே சிவகங்கை மாவட்டம் சங்கரா புரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்த பதட்டம் குறைவதற்குள் அடுத்து இந்த மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை பணி ஓய்வு பெற்ற அலுவலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2015 முதல் 2018 வரை திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியின் அப்போதைய கமிஷனர் மனோகரன் உட்பட 5 அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சியாக இருந்த திண்டுக்கல் 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி எல்லைக்குள் இருந்த 48 வார்டுகளுடன் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பால கிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, அடியனூத்து உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் இத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நகர வளர்ச்சி இல்லாமல் திண்டுக்கல் பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருந்து நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது. நகர எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடியவில்லை.
அது மட்டுமல்லாது பல முறைகேடுகளிலும் திண்டுக்கல் மாநகராட்சி சிக்கித் தவிக்கிறது எனவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொது மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடியை மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு காவலர்கள் வரி வசூல் மைய இளநிலை உதவியாளர் சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் , இளஞ்செழியன் , சாணார்பட்டியை சேர்ந்த முரளி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் 2015 முதல் 2018 வரை திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியின் அப்போதைய கமிஷனர் மனோகரன் உட்பட 5 அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல்லில் துணை இயக்குனர் தலைமையில் 2015-16 முதல் 2018 -19 வரை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில் வருவாய் மற்றும் முதலீடு, குடிநீர் வழங்கள் நிதி, பாதாள சாக்கடை நிதி மற்றும் தொடக்க கல்வி நிதி ஆகியவற்றிலிருந்து ரூ. 17 கோடி வரை (ரூ.17,73,16,820) வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோரால் திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 1 முதல் 12 வரை சொத்து வரி முறைகேட்டில் 18,00,272 ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வருகிறது. அதேபோல் சென்னையைச் சேர்ந்த சுசி இண்டஸ்ட்ரீஸ் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு 137 குப்பை தொட்டிகள் 19834 ரூபாய் மதிப்பை 37750 ரூபாய் என உயர்த்தி வாங்கியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் மாநகராட்சி ஆணையர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன், முன்னாள் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் கணேசன் (Rtd), முன்னாள் மாநகராட்சி துணை பொறியாளர் மாரியப்பன், மாநகராட்சி துணை பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் சென்னை சுசி இண்டஸ்ட்ரி உரிமையாளர் நடராஜன் ஆகியோர் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற ஊழல் வழக்குகளில் சிக்குபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுப்பதன் மூலம் மட்டுமே மக்கள் பணத்தை தின்று கொழுக்கும் லஞ்ச பெருச்சாளிகளை ஒழிக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

83370cookie-check17 கோடி ஊழல் மாநகராட்சி முன்னாள் ஆணையர் உட்பட 5 பேர் மீது வழக்கு பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!