Spread the love

மாநாடு 20 August 2022

தன் மனைவி ஏமாற்றியதால் விரக்தியடைந்து சைக்கோவாக மாறியவர் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை கொலை செய்து அந்த உடலுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

அந்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், அதன் விவரம் பின்வருமாறு:

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அனகாபள்ளி மாவட்டத்தை ‌ சேர்ந்தவர் சந்தகராம்பாபு. இவரது மனைவிக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே திருமணம் கடந்த உறவு இருப்பதாக கூறி ராம்பாபு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக அவரை பிரிந்துள்ளார்.

இந்த நிலையில் தான் பணிபுரிந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளராலும் ராம்பாபு ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று அடுத்தடுத்து ஏமாற்றத்தால் ராம்பாபு தனிமையிலிருந்து பைத்தியம் போல மாறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை கொலை செய்து பின்னர் சடலத்தை வைத்து உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.கடந்த வாரம் வயதான தம்பதியை கொலை செய்த பின்னர், கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களுக்கு வாட்ச்மேன்களாக பணியாற்றிய மூன்று பேரின் குடும்ப பெண்களையும் அடுத்தடுத்து கொலை செய்துள்ளார்.

இந்தக் கொலைகளுக்கெல்லாம் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் காவலர்கள் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ராம்பாபுவை பிடித்து விசாரித்தபோது தான் இந்த உண்மைகள் வெளியே தெரிந்திருக்கிறது சைக்கோ கொலைகாரனை கைது செய்த காவலர்கள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

48050cookie-checkபெண்களைக் கொன்று உல்லாசமாக இருந்த சைக்கோ கைது

Leave a Reply

error: Content is protected !!