மாநாடு 18 December 2022
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமண்டங்குடி என்கிற ஊரில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. அது கடந்த ஏறக்குறைய 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்திருக்கிறது.
இவ்வேளையில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்டு இருக்கிறது அதனிடையே ஒவ்வொரு விவசாயிகளின் பெயரிலும் பல லட்சங்களை வங்கியில் விவசாயிகளுக்கே தெரியாமல் கடன் வாங்கியதாக தெரிய வருகிறது . இதனால் விவசாயிகள் எவ்வித கடனும் எங்கேயும் வாங்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது தங்களது வாழ்வாதாரமே முழுவதும் கேள்விக்குறியாக இருப்பதால் இதனை பலமுறை அதிகாரிகளிடமும் ஆள்பவர்களிடமும் எடுத்துக் கூறியும் எவ்வித பலனும் இல்லை என்று கூறி கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள், வெயிலிலும் மழையிலும் வயலில் நின்ற விவசாயிகள் வயிற்றெரிச்சலோடு பெய்த விடாத அடைமழையில் இந்த இடத்திலேயே தங்கி இருந்தோம் என்று கூறியது மனசாட்சி உள்ள மனிதர்களை சிந்திக்க வைத்து நடைபெற்று இருக்கின்ற தவறுகளை தடுத்து நிறுத்தி சரி செய்யத் தூண்டும்,
ஆனால் இங்கு விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து 18 நாட்களாக ஈடுபட்டு வரும்போதும் இவர்களின் வாக்கை வாங்கி திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மக்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை வந்து கூட பார்க்கவில்லை என்கிறார்கள்.
மேலும் திரு ஆருரான் சர்க்கரை ஆலையை வாங்கியுள்ள கால்ஸ் நிறுவனம் திமுகவின் முக்கிய புள்ளியின் நிறுவனம் என்பது எங்களுக்கு தெரியும் என்றும் இந்நிறுவனத்தில் டாஸ்மாக்கிற்கு தேவையான மதுபானமும் தயாராகிறது என்பதும் எங்களுக்கு தெரியும் என்றும் போராடும் விவசாயிகள் பொங்குகிறார்கள்.
அதேபோல 2500 கோடி ரூபாய் மதிப்பு உள்ள சர்க்கரை ஆலையை சொற்பத்தொகையான 147 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள் இதுவும் எங்களுக்கு தெரியாமல் அல்ல, திமுக தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டபோது இந்த சர்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்தும் என்று வாக்குறுதி கொடுத்தது ஆனால் அதனை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு இதுவரை எங்களுக்கு எவ்வித தீர்வும் கொடுக்காமல் எங்கள் போராட்டத்தை கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்து கொள்ளும் இந்த திமுக அரசு, வாக்கு கேட்டு எந்த முகத்தோடு எங்கள் மூஞ்சில் முழிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம் என்று கோபத்தோடு கூறினார்கள்,
இப்போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கு பெற்று இருக்கிறார்கள் .18 வது நாளான நேற்று அரசுக்கு தங்களின் நிலையை தெரிவிக்கும் போராட்டத்தின் வடிவமாக தலையை மொட்டை அடித்து காட்டியிருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சனையில் கவனம் செலுத்தி தலையிட்டு தவறுகளை சரி செய்ய வேண்டும் .
சரி செய்வாரா முதல்வர் பொறுத்திருந்து பார்ப்போம்.
வீடியோவாக காண தொடவும்: https://youtu.be/m7IjtsyCHgU