அய்யாதுரை ஸ்டாலின் ஆனது இப்படி தான் கூறினார் மு.க.ஸ்டாலின்
நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசிய போது முதல்வர் ஸ்டாலின் தனக்கு
அய்யாதுரை என்ற பெயர் வைப்பதாக இருந்தது என்றும் ஆனால் ஸ்டாலின் என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டது என்ற காரணத்தை சொன்னார்.
தனது தந்தை கருணாநிதி அவர்கள் அய்யாதுரை என்ற பெயர் வைப்பதாக தான் இருந்தது. ஆனால் ரஷ்யாவின் புரட்சியாளர் ஜோசப் ஸ்டாலின் அன்றைய தினம் இறந்ததால் அந்த பெயரை எனக்கு சூட்டினார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த கேள்விக்கு பதிலாக இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பேச்சு அமைந்துள்ளதாக திமுகவினர் சொல்லி மகிழ்கிறார்கள்.
சிலரோ அய்யாதுரை என்கிற பெயரே நல்லா தான் இருக்கு அதையே வைத்திருக்கலாம் என்றார்களாம் ..
மாநாடு இதழின் சார்பாகவும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் மணமக்கள் வாழ்க வளமுடன்