மாநாடு 30 June 2022
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் முதன்மையான கோரிக்கை ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே,
அதோடு இந்த 23 தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது, நடந்து முடிந்த பொதுக்குழுவில் தற்காலிக அவை தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் நிரந்தர அவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அடுத்த பொதுக்குழு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி நடைபெற இருக்கின்ற பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு பல வகைகளிலும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கின்ற பொதுக்குழுவை தடை செய்யும் வழக்கை விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருகிற ஜூலை 4 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கு தடை இல்லை என்கிற இந்நிலை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.