மாநாடு 15 February 2022
வரும் 19ந்தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதி “26 வார்டு” அமைந்திருக்கின்ற அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும், எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக ஜமாத்தில் யாரும் செயல்படவில்லை என்பதையும், ஜமாத் பெயரைச்சொல்லி யாரும் எந்த ஒரு நபருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்க கூடாதென்றும், ஜமாத்தார்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் அதில் குறிப்பிட்டிருப்பதாவது
எதிர்வரும் மாநகராட்சி மாமன்ற தேர்தலில்19-2-2022 நடைபெற இருக்கின்ற தேர்தலில் ஜமாத்தார்கள் தாங்கள் சுயவிருப்பத்தின் படி அவரவரின் வாக்குகளை ஜனநாயக முறைப்படி தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவும். இதில் தஞ்சாவூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக எந்த ஒரு தனிப்பட்ட வேட்பாளரையும் முன் நிறுத்தப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தவறாமல் வாக்களியுங்கள். ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் ஜமாத் பள்ளிவாசல் தலைவர் மகபூப் அலி என்று கையொப்பமிட்டுள்ளது.
இந்த வார்டில் நான்கு இஸ்லாமிய வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும் , இந்த ஜமாத்தின் பெயரைச்சொல்லி சிலர் சிலருக்கு ஆதரவு தெரிவிப்பதும் நமது ஒற்றுமையை சீர்குலைக்கும் என்கிற காரணத்தால் இந்த அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தெரிய வருகிறது.