மாநாடு 28 March 2022
தஞ்சையில் 16வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அண்ணா பிரகாஷின் கவுன்சிலர் பதவி பறிக்கப்பட்டது.
வேட்புமனுவில் தம்பியின் ஒப்பந்த பணியை மறைத்ததாக தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
தஞ்சை மாநகராட்சி 16-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக இருப்பவர்
அண்ணா.பிரகாஷ் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக்கூடியவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அவரது ரத்த சொந்தங்களோ அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்ககூடாது என்றும்
மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.
ஆனால் கவுன்சிலர் அண்ணா.பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
இதை அண்ணா.பிரகாஷ் மறைத்து வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி ஆணையருமான சரவணகுமார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
பிரகாஷ் தரப்பில் கொடுக்கப்படும் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அண்ணா.பிரகாஷ் கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என ஏற்கனவே கூறப்பட்டது.


இது தொடர்பாக கவுன்சிலர் அண்ணா.பிரகாஷ் தரப்பில் அவரது சகோதரர் ராம்பிரசாத் கொடுத்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அதனால் 16வது வார்டு கவுன்சிலராக பதவி ஏற்றிருந்த அண்ணா பிரகாஷ் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணா பிரகாஷின் தம்பி எடுத்திருந்த ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பிரகாஷ் தஞ்சாவூரின் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
274630cookie-checkதஞ்சையில் திமுக கவுன்சிலர் பதவி பறிப்பு பரபரப்பு