மாநாடு 18 August 2022
சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பில் நடத்தப்பட்ட அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என்றும் அக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் இபிஎஸ்,ஓபிஎஸ் இணைந்து பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது, இந்தத் தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் தரப்பில் அனைத்து மாவட்டங்களிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள் மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அதிமுக வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அதற்கு விலகிச் சென்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் . எடப்பாடி பழனிச்சாமி அந்த அழைப்பை நிராகரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்,
அதன் பிறகு பேசிய எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறினார்: இணைந்து செயல்பட ஓபிஎஸ் அடிக்கடி அழைப்பு விடுக்கிறார். அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் பதவி வேண்டும்… ஆனால் பதவிக்கேற்றபடி உழைப்பு போட மாட்டார் அவர்! யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை’ என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், ‘சுமார் 50 ஆண்டுகாலமாக அதிமுக-வை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா வழிநடத்தியுள்ளனர். இப்போது இந்த இயக்கத்தை சிலர் தன்வசம் கொண்டு செல்ல நினைக்கின்றனர். அதை தடுக்க நாங்கள் நினைக்கிறோம். அதனால்தான் சில பிரச்னைகள் ஏற்படுகிறது.
அதிமுகவில் சட்டவிதிகளை இயற்றவும், மாற்றவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின. இதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் இந்த வழிமுறை உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஆக 2,663 அதிமுகவில் சட்டவிதிகளை இயற்றவோ, மாற்றவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதற்காகவே பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தான் பொதுக்குழுவுக்கு வரவில்லை. தொண்டர்கள் ஆதரவை பெற்று பொதுக்குழுவுக்கு வந்து எந்த விஷயத்தையும் அவர் செய்யட்டும். பொதுக்குழுவுக்கு வருவதை தவிர்த்துவிட்டு, பின் அவரேவும் நீதிமன்றத்தை நாடுவது எந்த விதத்தில் சரியான நடைமுறையாகும்.
கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள அவரே, அநாகரிகமாக நடந்து கொண்டால், பின் அவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்? அன்றைய தினம் பொதுக்குழுவை நிராகரித்துவிட்டு, அவரும் அவரது ஆதரவாளர்களும் போய் அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தனர். சொல்லப்போனால் அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் திருடிச் சென்றனர். ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தையும் எங்கள் தரப்பினரையும் ஓபிஎஸ் தரப்பினர் தாக்கினார்கள். பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓபிஎஸ், பின் ஏன் நீதிமன்றங்களையே நாடிச் செல்கிறார்?
அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே அதிமுக-வின் இன்றைய நிலைக்கு காரணம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரண்டு அணிகளாக பிரிந்து, பின்னர் இரு அணிகளும் இணைந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் – இணை ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்; பொது உறுப்பினர்களால் இல்லை. ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்’ என்றார்.
தொடர்ந்து இணைந்து செயல்பட ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்திருந்தார். அது குறித்து பேசிய அவர், ‘சசிகலாவை எதிர்த்து தானே ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தார்? அவர்களையே அழைப்பது ஏன்? ஓபிஎஸ்சிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை. ஓபிஎஸ் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்? ஒற்றைத் தலைமையே அதிமுக தொண்டர்கள் விருப்பம். ஒற்றைத் தலைமை வேண்டுமென அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தெரிவித்தனர்’ என்றார்.