மாநாடு 20 September 2022
சமீப காலமாக தமிழ்நாட்டில் வெறும் கண்காட்சி தான் நடைபெற்று வருகிறது, ஆட்சி நடைபெறவில்லை என்று பல சமூக ஆர்வலர்களும், பல கட்சிகளும் கூறி வருவதை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது,
மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்பதற்கு ஏற்ப தஞ்சாவூரிலும் தொடர்ந்து காட்சிகள் தான் நடைபெற்று வருகிறது,
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதிகளில் சாலைகள் பழுதாகி இருக்கிறது ,குண்டும் ,குழியுமாக இருப்பதை பார்க்கும் சிறு குழந்தைகள் சாலையில் கிணறு தோண்டி இருக்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு பல இடங்களிலும் சாலைகள் அலங்கோலமாக இருக்கிறது, ஆனால் அங்கெல்லாம் சரி செய்யப்படாமல் புதிய பேருந்து நிலையம் பின்புறம் 10 கோடி மதிப்பில் சாலைகள் போட்டு நடுவில் எஸ்,எஸ் ,பைப் பொருத்தப்பட்டு வருகிறது.அதேபோல அருளானந்த நகர் போன்ற பகுதிகளில் நடைமேடை போடப்படுகிறது.
இதுபோல எண்ணிலடங்கா எதிர்மறை பிரச்சினைகள் தஞ்சாவூரில் இருக்கிறது, எழில் மிகு நகரமாக தஞ்சாவூரை மாற்றுவதாக கூறி பல இடங்களிலும், நோண்டப்பட்ட சாலைகளும், சாக்கடைகளும் நோய் பரப்பும் தயார் நிலையில் இருக்கிறது, இப்போதே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் வந்து கொண்டிருக்கிறது, இன்னும் சில தினங்களில் மழை காலம் தொடங்கவிருக்கிறது .அதற்குள் நோண்டப்பட்ட சாக்கடைகள் எல்லாம் சரி செய்யப்படுமா? சாலைகள் தண்ணீர் தேங்காதவாறு முறையாக போடப்படுமா? என்கின்ற பல கேள்விகள் நம் முன்னே இருக்கிறது,
இதையெல்லாம் சரி செய்வதற்கான அத்தனை துறைகளிலும், பணியாளர்களும் ,அதிகாரிகளும் பெரும்பாலும் இருப்பதாகவே தெரிகிறது, மக்கள் பணி செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களும், மாநகர தந்தையும் இருக்கிறார், இவர்களெல்லாம் இருந்த போதும் இது நாள் வரை மேற்குறிப்பிட்ட குறைகள் அத்தனையும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.இவை அனைத்தையும் வருகிற மழைக்காலத்திற்குள் சரி செய்ய வேண்டும். சரி செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் சற்று நேரத்துக்கு முன்பாக பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இர்வின் ஆற்றுப் பாலம் பகுதியில் அமைந்துள்ள ரயிலடி செல்கின்ற முக்கிய சாலையில் உள்ள மின்விளக்கு போடப்படாமல் அந்த இடமே இருட்டாக இருக்கிறது அதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது, அருகில் இருக்கின்ற தனியார் கடைகள் அத்தனையிலும் மின்விளக்குகள் ஒளிர்கிறது ,
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு வேலை செய்கின்ற மக்கள் ஊழியர்கள், மக்களுக்காக போடப்பட்ட மின் விளக்கை போடாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை, இருந்த போதும் பொதுமக்களுக்கு தேவை காரணம் அல்ல, ஆக வேண்டிய காரியம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து உடனடியாக இந்த குறையை சரி செய்ய வேண்டும், இதன் அருகிலேயே தான் மாநகராட்சி அலுவலகம் இருக்கிறது என்பதும் தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்பதற்கான பரிசையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் ராம்குமார் அவர்களுக்கு எங்களது புரட்சிகர வாழ்த்துக்கள் உங்கள் செய்திப் பணி மென்மேலும் தொடர என்றும் உங்களுக்கும் உதவியாக இருப்போம் என்பதை மனதில் வையுங்கள் நன்றி வணக்கம் வீரத் தமிழர் முன்னணி நாம் தமிழர் கட்சி