மாநாடு 3 October 2022
திருச்சி மலைக்கோட்டை , சிங்காரத்தோப்பு பகுதிகளில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்தப் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு துணிக்கடையின் முன்பு பலூனுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில் 35 வயதுடைய ரவிக்குமார் என்பவர் உயிரிழந்திருக்கிறார், 13 வயதுடைய மாணவர் ஜீவானந்தம் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், அருகில் நின்றிருந்த ஆட்டோ முழுவதும் சேதமாகி இருக்கிறது,
இந்த விபத்துக்கு காரணமான பலூன் வியாபாரி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அனார்சிங் என்பவர் தப்பி ஓடினார், விபத்து நடந்த இடத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதன் பிறகு பேசிய மாவட்ட ஆட்சியர் திருச்சி மாவட்டத்தில் இது போன்ற ஹீலியம் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த அனுமதி இல்லை, மீறி யாரேனும் பயன்படுத்தினால் அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், மேலும் உயிரிழந்த ரவிக்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது, இந்த சம்பவம் முற்றிலும் விபத்து மட்டுமே வேறு சதி எதுவும் நடைபெறவில்லை என்றார்.
தப்பி ஓடிய பலூன் வியாபாரி உத்திரபிரதேசத்தை சேர்ந்த அனார் சிங் காவலர்களால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.