Spread the love

மாநாடு 10 October 2022

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அப்போது இருந்த அரசியல் சூழலின் காரணமாகவும், பொய் பரப்புரையின் மூலமும் ,ஐபேக் என்கிற தேர்தல் வியூக திட்ட அமைப்பு நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் கட்டமைத்த பொய் பிம்பத்தின் மூலமும் திமுகவிற்கு மு.க.ஸ்டாலின் புதிதாக தலைமையேற்று இருக்கிறார். ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை திமுக, இப்போது திமுகவிற்கு வாக்களித்தால் மக்கள் சுதந்திரமாக உரிமையோடு வாழலாம் என்கிற எண்ணத்தில் இருந்த சமயத்தில் அவர்களிடம் இருந்து வாக்கை வாங்கி திமுக வெற்றி பெற்றது மு.க‌ஸ்டாலின் முதலமைச்சரானார்.

மு க ஸ்டாலின் பதவி ஏற்ற உடன் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் படியும் வாக்களிக்காதவர்கள் இவ்வளவு நல்லவர்களுக்கு நாம் வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்தும் படியும் எனது தலைமையிலான ஆட்சி இருக்கும். எனது தலைமையிலான திமுக ஆட்சியில் சிறு தவறை கூட நமது கட்சிக்காரர்கள் செய்து விடக்கூடாது. அப்படி ஏதாவது தவறுகள் நடந்து என் கவனத்துக்கு தெரிய வந்தால் நான் சர்வாதிகாரியாக செயல்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தன்னை சுற்றிலும் சிறப்பான அதிகாரிகளை நியமித்தார் அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் மு.க. ஸ்டாலின் ஆட்சி காலம் இதற்கு முன்பு இருந்த திமுகவின் ஆட்சிக்காலத்தை விட மாறுபட்டு இருக்கும் என்று நம்பினார்கள். ஆனால் ஆட்சி அமைத்து சிறிது காலத்திலேயே அதற்கு எதிர்மறையாக திமுகவினர் நடக்கத் தொடங்கினார்கள், கவுன்சிலரின் கணவன்மார்கள் அத்து மீறுவதையும், சில பொறுப்பாளர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதையும், அமைச்சர்கள் வாக்களித்த மக்களிடத்தில் மரியாதை இல்லாமல் கேவலமாக நடந்து கொள்வதையும், பொது மேடைகளில் பேசுவதையும் செய்திகளின் வாயிலாக அனைவரும் அறிய முடிந்தது,அது மட்டுமல்லாமல் நேற்று திமுகவின் தலைவராக மீண்டும் பொறுப்பு ஏற்று கொண்ட மு.க. ஸ்டாலின் பேசும்போது அவரும் இதையே சுட்டிக்காட்டி ஒவ்வொரு நாளும் திமுகவினரின் அட்டூழியம் எப்படி இருக்கிறது என்பதற்கு சான்றாக, தான் பல நாட்கள் தூக்கத்தை இழந்து விடுவதாகவும், விடியும் போது எந்த பிரச்சனையை எங்கு யார் ஆரம்பித்து இருப்பார்களோ என்கின்ற பயத்திலேயே விழிப்பதாகவும் பேசி திமுக ஆட்சியின் அலங்கோலத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது, அதனைபொட்டி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள மாநகராட்சி இடங்களில் தற்காலிக கடைகளை திமுகவினர் அமைத்துக் கொண்டு ஒரு கடைக்கு வாடகையாக சராசரியாக 20,000 ரூபாய் என தீர்மானித்து அதனை திமுகவினரே பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. அதன்படி மொத்தம் 500 கடை அமைப்பதாக திட்டமிடப்பட்டிருக்கிறதாம் தற்போது வரை 400 கடைகள் போடப்பட்டு விட்டதாகவும், திலகர் திடலில் 100 கடைகள் அமைக்க உள்ளதாகவும் செய்திகள் வருகிறது,

இந்த கடைகளில் இருந்து வரும் பணம் முழுவதையும் திமுக கட்சிக்காரர்களே பங்கிட்டு கொள்வார்களாம் மாநகராட்சிக்கு இந்த கடைகளிலிருந்து வரும் பணம் சேராதாம்.

திமுகவினரின் அடாவடித்தனத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து உறுதுணையாக இருப்பது, மாநகராட்சியை வளர்க்க வேண்டிய, மாநகராட்சி மக்களுக்கு உண்மையாக இருந்து செயலாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கின்ற மேயர் சண்.ராமநாதன் தான் என்று கூறப்படுகிறது.

இந்த செயலைப் பற்றி பொது மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: தஞ்சாவூரில் பலத் தெருக்கள் முழுவதுமாக குண்டும் குழியுமாக இருக்கிறது, பல இடங்களில் சாக்கடைநீர்கள் தெருவில் ஓடிக் கொண்டிருக்கிறது, அதனையெல்லாம் இதுவரை சரி செய்யவில்லை ,ஆனால் நாள்தோறும் நான் அதை செய்து விட்டேன் இதை செய்து விட்டேன் என்று வலைத்தளங்களில் வெற்று விளம்பரங்களை செய்து கொண்டிருக்கிறார் மேயர் சண்.ராமநாதன் ஆனால் ஆக்கப்பூர்வமாக இதுவரை எந்த வேலையையும் செய்ததாக தெரியவில்லை மாநகர தந்தை என்ற பொறுப்பிற்கு வந்தவர் உண்மையிலேயே மாநகர மக்களின் மீது அக்கறை உள்ளவராக இருந்தால் மாநகராட்சியில் மாநகராட்சியின் இடத்தை திமுகவினர் அத்துமீறி ஆக்கிரமித்து கடைகள் போட்டு மாநகராட்சிக்கு வருமானம் தராமல், திமுகவினரே அந்த வருவாயை முழுவதையும் எடுத்துக் கொள்ள எப்படி சம்மதிப்பார். இதன் மூலம் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதனின் உண்மை முகம் பொதுமக்களுக்கு தெரிந்துவிட்டது இவர்களுக்கெல்லாம் எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி தான் இருக்கிறதே தவிர ,மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பதை தஞ்சாவூர் திமுகவினர் காட்டி வருகிறார்கள் . தமிழகத்தின் முதல்வர் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் பேசும்போது திமுகவினர் ஏதாவது தவறில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார். ஆனால் இதெல்லாம் அவரின் பார்வைக்கு போகாமல் இருக்க வாய்ப்பில்லை இதுவரை மு.க.ஸ்டாலின் யார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை .இதன் வெளிப்பாடு அடுத்தடுத்து வருகின்ற தேர்தலில் தெரியவரும் என்றார்கள்.

திமுகவின் உண்மை தொண்டர்களிடம் இதைப் பற்றி கேட்டபோது அவர்கள் கூறயதாவது : உண்மையிலேயே தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் மீது அக்கறை வைத்துள்ளார். மக்கள் விரும்பும் படியான ஆட்சியை தர வேண்டுமென்று நினைக்கிறார் ஆனால் திமுகவில் உள்ள பலரும் அவரது எண்ணத்தில் மண்ணை அள்ளி போடுவது போல பல செயல்களில் ஈடுபடுகிறார்கள் அதனால் திமுகவிற்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எவ்வளவு கெட்ட பெயர் வருகிறது என்று சிறிதும் யோசிக்காமல் பணம் சேர்ந்தால் போதும் என்கின்ற நோக்கில் எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமென்றாலும் நடக்க தயாராக இருக்கிறார்கள் இது கட்சிக்கும் கட்சியை உண்மையாக நேசிக்கும் எங்களைப் போன்ற தொண்டருக்கும் மிகுந்த வருத்தத்தை தருகிறது, இதைதான் நேற்று கூட எங்கள் தலைவர் குறிப்பிட்டு பேசினார். உண்மையில் யார் யார் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்று தலைவருக்கு தெரிய வந்தால் அவர்களின் பதவி அதிகாரம் அனைத்தையும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் பறித்து விடுவார், ஸ்டாலினுக்கு இங்கு நடப்பது எதுவுமே சென்று சேர்வதில்லை, அவர் கவனத்திற்கு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களின் பட்டியல் போய் சேர்ந்தால் உறுதியாக அவர்களின் பதவி பறிக்கப்படும் என்றார் திமுகவின் உடன்பிறப்பு.

நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கந்தசாமி இதைப்பற்றி கூறியதாவது; திமுக ஆட்சியைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் நாங்கள். இனமே செத்து விழுந்தாலும் பணமும், பதவியும் போதும் என்ற எண்ணத்தில் தான் இருக்கும் திமுக. திமுக ஆட்சிக்கு வந்தால் சரிவராது ஏனெனில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருக்கிறார்கள். சாதாரணமாகவே திமுக ஆட்சி அமைத்தால் ரௌடிசம் தலைதூக்கும், பொறுப்பாளர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களது பொறுப்புகளுக்கு தகுந்தவாறு சர்வாதிகாரம் செய்வதையும், விதிமீறல்களில் ஈடுபட்டு அட்டூழியம் செய்வார்கள் பணம் சம்பாதிப்பதற்காக எந்த வேலையையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று தேர்தல் பரப்புரையின் போது கூறிவந்தோம். ஆனால் மக்கள் சில ஊடகங்களின் பொய் பிம்பத்தை நம்பி திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்கள் ,ஆனால் கடந்த 15 மாதங்களிலேயே திமுகவின் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள், இதுவெல்லாம் முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்? அப்படி தெரியாமல் இருந்தால் அவர் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்றல்லவா அர்த்தம்.இந்நிலையில் தஞ்சாவூரில் மாநகராட்சியின் இடங்களில் திமுக மாநகரச் செயலாளர் சண்.ராமநாதனின் ஆதரவோடு திமுகவினர் கடைகளை கட்டிக்கொண்டு கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த செயலை கண்டித்து இன்னும் சில நாட்களில் மாநகராட்சியை, மாநகராட்சி மேயரை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் அப்போது திமுக தலைவர் மு,க,ஸ்டாலின் முறைகேடில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்ட , மாநகர திமுகவினர் மீதும் திமுக பொறுப்பாளர்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கிறார், என்பதையும், உண்மையிலேயே அவரின் சர்வாதிகாரம் என்ன என்று வாக்களித்த மக்களும் தெரிந்து கொள்வார்கள் அதன் மூலம் மு.க.ஸ்டாலினின் உண்மை முகத்தையும், அவரின் ஆளுமைத் திறனையும் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் திமுகவினர் ஆட்சியில் இருந்தால் தஞ்சாவூர் முழுவதையும் குத்தகைக்கு எடுத்ததாக அர்த்தமா என்று கேட்டார் ஆதங்கத்தோடு.

அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது; ஆரம்பத்தில் எல்லாரும் போலவே நாங்களும் ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி மக்களின் ஆதரவை பெற்று ஜொலிக்கும் என்று தான் நம்பினோம். ஆனால் ஆட்சியின் காட்சி எங்கள் எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்துப் போட்டு விட்டது, சரி இப்போது நீங்கள் கேட்ட தஞ்சாவூர் கடை பிரச்சனைக்கு வருவோம் இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் கடைகள் இவ்வாறு கட்டப்பட்டு கட்சிக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டது. 4000 ,5000 ரூபாய் என்று வாடகை நிர்ணயிக்கப்பட்டது. அப்போது அந்த கடைகளில் மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள். வரியை வசூல் செய்து மாநகராட்சிக்கு கொடுத்து வந்தார்கள் அதிலும் சில முறைகேடுகள் நடந்தது என்று கூறப்படுகிறது அப்போதே கட்சிக்காரர்கள் இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடுவது தவறு என்று இந்த விவரம் தெரிந்தவர்களால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாநகர ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்றவுடன், தஞ்சாவூரில் தீபாவளி நேரங்களில் எந்த அரசியல்வாதிகளும் ,எந்த கடைகளையும் ஆக்கிரமிக்காமல் இருந்தார்கள். அப்போது திமுக ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

உள்ளாட்சித் தேர்தல் நடந்த பிறகு வரும் முதல் தீபாவளி இது இதிலேயே தஞ்சாவூர் திமுகவினர் கோடி கணக்கில் பணத்தை சுருட்ட திட்டம் தீட்டி செயலில் இறங்கி விட்டார்கள், மீதமுள்ள காலங்களில் மக்கள் இன்னும் எத்தனை கஷ்டங்களை இவர்களால் அனுபவிக்கப் போகிறார்களோ முன்பெல்லாம் அரசியல்வாதிகள் தவறு செய்தால் அதை மறைப்பதற்கு பல வழிகள் இருந்தது ,ஆனால் நேற்று ஸ்டாலின் குறிப்பிட்டது போல இப்போதெல்லாம் மூன்றாவது கண்ணாக செல்போன் அனைத்து இடங்களிலும் இருக்கிறது இருந்தபோதிலும் எந்த அச்சமும் இல்லாமல் தஞ்சாவூர் திமுகவினர் இவ்வாறு செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கதக்கது இந்நிலை நீடித்தால் திமுக எந்த தேர்தலையும் சந்திக்க முடியாது, இவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.

மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்படுகிறாரா?  சல்லித்தனத்திற்கு துணை போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

53250cookie-checkதஞ்சாவூர் மாநகராட்சி மேயர் முற்றுகை போராட்டம் நாம் தமிழர் கட்சி அறிவிப்பு பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!