மாநாடு 4 November 2022
உலகில் எத்தனை அதிசயங்கள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் தலையாய அதிசயங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய, நேர்த்தியான உலக அதிசயம் தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்களின் பெருமையையும், கலைத்திறனையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக பேரரசன் இராசராச சோழன் கட்டி எழுப்பிய தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகின்ற பெருவுடையார் திருக்கோயில் .
இந்தக் கோயில் கிபி 1003ஆம் ஆண்டு முதல் கிபி 1010 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது, ராசராச சோழன் காலத்தில் நீர் மேலாண்மைகளும், கட்டிடக்கலைகளும் ,மக்களாட்சி முறையும் , சாதிய சமத்துவமும் சிறந்து விளங்கியது என்று தெரிகிறது. இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தை அடக்கி தமிழர்களின் அடையாளமாய் விளங்குகின்ற ராசராச சோழனின் பிறந்த நாளை தஞ்சாவூரில் சதய விழாவாக ஐப்பசி மாதம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த ஆண்டு தமிழக அரசு இனி சதய விழாவை அரசு விழாவாக முன்னெடுத்து கொண்டாடப்படும் என்று அறிவித்திருப்பது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
இந்நிலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவும் நிலைத்து நின்று தமிழர்களின் பெருமையை பறைசாற்றும்படி இராசராச சோழன் கோயில் கட்டினார். அந்தக் கோயிலின் வெளியே இருக்கின்ற பெயர்பலகை பல ஆண்டுகளாக சமஸ்கிருதத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று இருந்தது, அதனை தமிழில் பெருவுடையார் திருக்கோயில் என்று வையுங்கள் அல்லது பெரிய கோயில் என்றாவது வையுங்கள் என்று தமிழ் அமைப்புகளும், தமிழ் தேசிய பேரியக்கமும் ,பெரிய கோயில் பாதுகாப்பு இயக்கமும் ,நாம் தமிழர் கட்சியும், பல அமைப்புகளும் கோரிக்கை வைத்து போராடி வந்தது அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் தஞ்சாவூர் பெரிய கோயில் என்று தமிழிலும், அடுத்த வரியில் பிக் டெம்பிள் என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது.
அதன் பிறகு அந்தப் பெயர் பலகையை எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள், பல நேரங்களில் அந்தப் பெயர் பலகையில் மின்விளக்குகள் எரியாமல் இருக்கும், அது போன்ற நேரங்களில் நமது மாநாடு இதழின் வாயிலாகவும் ,நமது மாநாடு youtube சேனல் மூலமாகவும், செய்திகள் வெளியிட்டு சுட்டி காட்டினால் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு டியூப் லைட் போடப்பட்டு மங்கிய வெளிச்சத்தில் அந்தப் பெயர் பலகை இருக்கும்.
பலமுறை இந்த செயலை சுட்டி காட்டிய பிறகும் கிராமப்புறத்தில் சொல்லப்படுகின்ற பழமொழியான “வேண்டா வெறுப்புக்கு புள்ளை பெற்று காண்டாமிருகம் என்று பெயர் வைத்தார்கள் ” என்பது போல பலரின் போராட்டத்திற்குப் பிறகு வைக்கப்பட்ட தமிழ் பெயர் பலகை பராமரிப்பின்றி இருப்பது மிகவும் அக்கறையற்றவர்கள் அதிகம் நிறைந்து விட்டார்கள் என்பதை காட்டுகிறது,
அதுவும் 1037ஆம் ஆண்டு நடைபெற்ற சதய விழாவில் அந்தப் பெயர் பலகையும் இருட்டாக வைக்கப்பட்டு அதன் வெளியே சீரியல் பல்பு தொடங்கப்பட்டது .
சாதாரண பெயர் பலகை தானே என்று இதனை கடந்து விடக்கூடாது ,ஏனெனில் ஒரு மனிதனுக்கு இன்சியல் எவ்வளவு முக்கியமோ ,அவ்வளவு முக்கியம் ஓர் இடத்தில் வைக்கப்படுகின்ற பெயர் பலகை , மாவட்ட ஆட்சியர் என்று ஆட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகை எப்படி இருக்கிறது, மாநகராட்சி அலுவலகம் என்று அலுவலகத்தில் வைத்திருக்கின்ற பெயர் பலகை எப்படி இருக்கின்றது, பல ஊர்களிலும் உள்ள மற்ற பல கோயில்களில் பெயர் பலகை எப்படி இருக்கிறது என்பதை அறியாதவர்கள் யாரும் இந்த கோயிலை நிர்வகிக்கவில்லை என்பது அனைவருக்குமே தெரியும்,
இருந்த போதும் இவர்கள் ஏன் இப்படியான இருட்டடிப்பை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் என்கின்ற கேள்வியை எழுப்புகிறார்கள் தமிழர்கள்.
இதைப் பற்றி நாம் தமிழர் கட்சியினர் கூறும் போது முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதை சரி செய்து பல இடங்களிலும் இருக்கின்றது போல மின்விளக்கோடு எங்கிருந்து பார்த்தாலும் தெரிகின்ற வகையில் ஒளிரப்படுகின்ற வகையில் பிரம்மாண்டமான பெரிய கோயிலில் பிரம்மாண்டமான பெயர் பலகை வைக்க வேண்டும் என்று மனு கொடுக்க உள்ளோம், அதனை காலம் கடத்தாமல் சம்பந்தப்பட்டவர்கள் செய்யவில்லை என்றால் தொடர்ந்து காலம் கடத்திக் கொண்டே இருந்தால், நாங்களே பெயர் பலகையை செய்து கீழே நாம் தமிழர் கட்சி என்று பொறித்து விடுவோம் .
அதன் பிறகாவது இவர்கள் சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் இதை செய்வோம் என்று கூறுகிறோம் சம்பந்தப்பட்டவர்கள் எங்களை அந்த நிலைக்கு தள்ளாமல் அவர்களே சரி செய்ய வேண்டுமென்று இந்த செய்தியின் வாயிலாகவும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்கள்.
உலகமே வியக்கும் படியான கோவிலைக் கட்டி புகழை சேர்த்தார் ராசராச சோழன். உள்ளூர் மக்கள் கூட முகம் சுளிக்கும் படி பெயர் பலகையை பராமரிப்பின்றி வைத்திருக்கிறார்கள் இவர்கள். விரைவில் அதனை சரி செய்ய வேண்டும்.
சதய விழாவிற்கு உள்ளூர் விடுமுறை விட்டு ஒளிவிளக்கு ஒளிர விடப்பட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் பகுதியே விழாக்கோலம் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெயர் பலகை மட்டும் இருட்டாக அலங்கோலமாக இருந்தது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். தவறுதலாக தவறு நடந்து இருந்தால் அது சரி செய்யப்படும். இச்செயல் சரி செய்யப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
வீடியோ லிங்க் இதோ: https://youtu.be/rsXm6mf3THE
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/bn/register-person?ref=UM6SMJM3