மாநாடு 06 December 2022
இன்று சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் என்கிற பகுதியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு 11 மணி அளவில் மாலை போட்டு மரியாதை செலுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில்
மாவட்ட பட்டியல் அணி தலைவர் விக்னேஷ் குமார் ராஜா உள்ளிட்ட ஏறக்குறைய 50 பாஜக தொண்டர்கள் நாஞ்சிக்கோட்டை பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.
அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்காரவி , கிளைச் செயலாளர் கருப்பு வினோத் உள்ளிட்ட மாவட்ட, கிளை நிர்வாகிகள் உட்பட ஏறக்குறைய 80 நபர்கள்
அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களை அம்பேத்கர் சிலைக்கு மாலை போட நாங்கள் விடமாட்டோம் என்று கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தடுத்திருக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் இரு தரப்பினரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதனால் ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருந்தது, காவலர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தார்கள்.இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டு விடுமோ என்கின்ற அச்சம் அப்பகுதியில் நிலவியது இதனால் அந்த பகுதியே பரபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.