மாநாடு 21 மே 2023
தமிழக அரசின் சார்பில் ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டு சாட்சி என்கின்ற அடைமொழியோடு தமிழக அரசின் சாதனைகளை திமுகவினர் மக்களிடம் விளக்கி கூட்டம் போட வேண்டுமென்று திமுகவின் தலைவர் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயத்தை குடித்து ஏறக்குறைய 25 பேர் இறந்தார்கள். இது பெரும் பரபரப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது இந்தப் பிரச்சனை.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாத தமிழக அரசின் நிலையை ஊடகங்கள் உட்பட ஊரார் அனைவரும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் அந்த பிரச்சனை முடிவதற்குள் தஞ்சாவூரில் இன்று அரசு டாஸ்மாக் மதுபாரில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட மதுவை கடை திறப்பதற்கு முன்பாகவே வாங்கிக் குடித்து 2 பேர் மரணம் அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலையில் கீழவாசல் பீரங்கி மேடு அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு கடை திறப்பதற்கு முன்பாகவே மது விற்கப்பட்டதாக கூறப்படுகிறது அதனை வாங்கி குடித்த 60 வயது மதிக்கத்தக்க
குப்புசாமி என்பவர் மதுக்கடை அருகே சுருண்டு விழுந்திருக்கிறார் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போது செல்லும் வழியிலேயே மரணம் அடைந்திருக்கிறார்,
40 வயது மதிக்கத்தக்க விவேக் என்பவரும் அதே போல மயங்கி விழுந்து இருக்கிறார். அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் அனுப்பி வைத்த போதும் மருத்துவமனையில் சிகிச்சை பலனிக்காமல் மரணம் அடைந்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்ய வந்திருந்தார்,
இந்நிகழ்விற்கு கடும் கண்டனத்தை நாம் தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டினால் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் மது குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதை நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை என்ற போதிலும் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டினால் தஞ்சாவூரில் தற்போது இரண்டு குடும்பம் நிற்கதியாகி இருப்பதை கருத்தில் கொண்டு அந்த குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்
என்று நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் மண்டல செயலாளர் மு. கந்தசாமி கூறுகிறார்.