Spread the love

போராட்டத்தால் பரபரப்பு 

சென்னை ஈஞ்சம்பாக்கம் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிழக்குக்கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது காவல்துறையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பாக இருக்கிறது அப்பகுதியில் மறியலில்

ஈடுபடும் மக்கள் கூறியதாவது:. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் தான் வாழ்ந்து வருகிறோம் எங்களுக்கு அரசு வழங்கிய ஆதார் அட்டை ,குடும்ப அட்டை ,வாக்காளர் அட்டை ரேஷன் கார்டு ,குடிதண்ணீர் இணைப்பு , மின்சார இணைப்பு ,உள்ளிட்ட அனைத்தும் இருக்கிறது அது மட்டுமல்லாமல் நாங்கள் அனைத்திற்கும் வரி கட்டி கொண்டிருக்கின்றோம். கூடுதலாக ஒரு தகவல் என்னவென்றால் இங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசாங்கமே அனுமதியும் அளித்திருக்கிறது .
குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் இருக்கின்ற தூய்மையான பகுதிகளில் எங்கள் பெத்தேல் நகரும் ஒன்று என்று கூறுகின்றனர். அந்த பகுதியில் வாழும் மக்கள் அவர்கள் கோரிக்கையாக முன் வைப்பது என்னவென்றால்

ஐ.எஸ்.சேகர் என்கிற ஒரு தனி மனிதருக்காக எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் முதல்வர் என்று சொல்லிக்கொள்கிற மு.க ஸ்டாலின் அவர்கள் எங்களின் கோரிக்கையை எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து எங்களுக்கு செவிமடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கானது என்பதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றார்கள் .


இந்த கோரிக்கையை முன் வைத்து இத்தனை நாட்கள் தெருவில் நடந்து கொண்டிருந்த போராட்டம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் சிக்னலில் சாலையை மறைத்து மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த பிரச்சினை விபரம் பின்வருமாறு:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக ஐ.எஸ்.சேகர் என்ற தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015 ல் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் சார்பாக துறை ரீதியாக நோட்டீஸ் அங்கு வாழும் மக்களுக்கு அனுப்பப்பட்டது அதில் பொங்கலுக்கு முன்பாக இருக்கின்ற வீடுகளை காலி செய்து தருமாறு கூறப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதிலிருந்தே மக்கள் போராட தொடங்கி விட்டார்கள்.அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி இப்போதுபெத்தேல் நகர் சிக்னலில் சாலை மறியல் போராட்டமாக ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் அந்த பகுதியே பரபரப்பாக இருக்கிறது.

11430cookie-checkசென்னையில் பரப்பரப்பு காவல்துறையினர் குவிக்கபட்டிருக்கிறார்கள்

Leave a Reply

error: Content is protected !!