மாநாடு 24 November 2022
நேற்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து விட்டு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆளுநரை சந்தித்ததற்கான காரணத்தையும், திமுக ஆட்சியில் 18 மாதங்களில் நடைபெற்று இருக்கின்ற முறைகேடுகளும் என்று ஒரு நீண்ட பட்டியலையே செய்தியாளர்கள் முன் கூறிக் கொண்டிருந்தார் ,
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு 18 மாதங்களில் கெட்டு இருக்கிறது என்றும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம், மாணவர்களிடம் பெருகிவரும் போதைப்பொருள் பழக்கங்கள், அனைத்து துறைகளிலும் ஊழல், லஞ்சம் கமிஷன் ,கலெக்சன் ,கரெக்ஷன் இதுதான் திராவிட மாடல் என்றார். மேலும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது இதை அமைச்சரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றவர்,
திமுக அரசு விளம்பர பேனர் அடிப்பதில் கூட மாபெரும் ஊழல் செய்திருக்கிறது என்று நம்ம ஊரு சூப்பர் என்று அச்சிடப்பட்ட பேனரை ஆதாரமாக காட்டினார்,
இந்த 1 பேனர் அடிப்பதற்கு தோராயமாக 350 ரூபாய் ஆகும் ஆனால் 7,906 ரூபாய் ஒரு பேனருக்கு செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது, இவ்வாறாக தமிழ்நாடு முழுவதும் இந்த விளம்பர பேனர் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் இதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்டதில் திமுக மாபெரும் ஊழல் செய்திருக்கிறது என்றார் இபிஎஸ்.
திமுக அமைச்சரிடம் பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றி கேட்டதற்கு ஆதாரம் இல்லாமல் இபிஎஸ் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார் என்றார்.
இந்நிலையில் இதைப் பற்றிய செய்தியை சேகரிக்க தொடங்கினோம். அதில் நமக்கு கிடைத்த தகவலின் படி திமுக விளம்பர பிளக்ஸ் அடித்த உண்மையான தொகையிலிருந்து, தொகையை பல மடங்கு உயர்த்தி காட்டி செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது தெரிய வந்திருக்கிறது,
அதன்படி தஞ்சாவூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு விளம்பர ப்ளக்சின் விலை 7,906 ரூபாய் என்கிற பில் நமக்கு கிடைத்து இருக்கிறது, அதனை இங்கு வெளியிட்டு இருக்கிறோம், உரிய விசாரணை நடத்தி உண்மைத் தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா ? என்ன நடக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.