மாநாடு 16 December 2022
திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார், தொடங்கிய காலகட்டத்தில் அது மாபெரும் வரவேற்பை பெண்களிடம் பெற்றது ஆனால் சில மாதங்களிலேயே அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள் தானே என்று பொது மேடையில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியது அதன் பிறகு எதார்த்தமாக பேசினேன் என்று தனது வருத்தத்தை அமைச்சர் மக்களிடம் தெரிவித்தார்.
இருந்த போதும் அவ்வப்போது சில பேருந்து நடத்துனர்கள் பெண்களிடம் இலவசமாக தானே செல்கிறீர்கள் என்று இவர்கள் அப்பன் வீட்டு பேருந்தில் வந்து ஓசியில் ஏறுவதைப் போல பேசி வருவது தொடர்ந்து தான் வருகிறது, இது போன்ற ஆட்களாலும் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாகிறது.
இந்நிலையில் நேற்று ஒரு மூதாட்டி பெண்மணி திருக்கருக்காவூரிலிருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்ட அந்த மூதாட்டியை அந்தப் பேருந்தின் நடத்துனர் பஸ்ஸில் இலவசம் என்பதால் சும்மா சும்மா போயிட்டு போயிட்டு வருவியா என்று கோபமாக கேட்கிறார், இதை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி பரிதாபமாக என்ன தம்பி இலவசம் என்று இவ்வளவு கேவலமாக பேசுறீங்க நீங்க என்று கேட்கிறார், அவரின் குரலை கேட்கும் போது யார் இந்த இலவசத்தை கேட்டது, யார் இவ்வளவு மானம் கெட்டு போகும்படி அடுத்தவர்களிடம் பேச்சு வாங்க வைத்தது என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்தார்கள்.
இந்த காட்சியின் ஒளிப்பதிவு மாநாடு வலையொளியிலும் , மற்றும் நமது சமூக ஊடக பக்கங்களிலும் நேற்று பதிவேற்றப்பட்டு மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது,
அதன் எதிரொலியாக கட்டணமில்லா பயணம் மேற்கொண்ட மூதாட்டியை தரக்குறைவாக பேசிய தஞ்சை திருக்கருக்காவூர் அரசுப் பேருந்து நடத்துனர் ரமேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
நமது செய்தியின் நோக்கம் யார் வேலையையும் கெடுக்க வேண்டும் என்பதல்ல ! மக்கள் ஊழியர்கள் கண்ணியத்துடன் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும் என்பதே!
வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் : https://youtube.com/shorts/cORpl185jRk?feature=share
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.