மாநாடு 02 January 2023
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பர்மா பஜார் பகுதியில் இயங்கி வரும் எப்போதுமே கூட்டங்கள் அதிகமாக காணப்படும் டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பானது விவரம் பின்வருமாறு : இன்று மதியம் 12:30 மணியளவில் ஜுபிடர் திரையரங்கம் அருகில் பர்மா பஜார் சாலையில் இருக்கும்
இந்தியன் டீக்கடையில் பணிபுரிகின்ற டீ மாஸ்டர் பழைய கேஸ் சிலிண்டர் தீர்ந்தவுடன் வேறு கேஸ் சிலிண்டரை மாற்றியுள்ளார், அந்த கேஸ் சிலிண்டரின் டியூப் சிறிது நேரத்தில் பற்றி எரிந்து இருக்கிறது அதன் காரணமாக ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்த மின் ஒயர்களும் எரிய ஆரம்பித்திருக்கிறது, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்திருக்கிறார்கள்,
இதனால் அங்கு ஏற்பட இருந்த பெரும் அசம்பாவிதங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது, சிலிண்டர் டியூப் தரமற்றதாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவினால் ஏற்பட்டதா? என்பது குறித்து பிறகு தெரிய வரும். ஆட்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது, இங்கு வைக்கப்பட்டிருந்த
கண்காணிப்பு கேமரா, பல்பு, மற்றும் மின் ஒயர்களும், சில பொருட்களும் சேதம் ஆகியிருந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியை பரபரப்பானது.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.