மாநாடு 14 January 2023
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி கடை தெருவில் நேற்று மாலை திடீரென சலூன் கடையில் தீப்பற்றி இருக்கிறது, சிகை அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி இருக்கிறது இதனால் இந்த தொழிலை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்த இவரின் குடும்பத்தினரான 6 பேரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்களாம் அதன் விவரம் பின்வருமாறு:
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி கடை தெருவில் யூனியன் வங்கி எதிரில் பல ஆண்டுகளாக மதிவாணன் என்பவர் முடி வெட்டும் கடை நடத்தி வந்திருக்கிறார் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நல கோளாறுகள் ஆஸ்துமா ஏற்பட்டிருக்கிறது வயதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது அதன் காரணமாக இவரால் சரிவர கடையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இவரது மகன் முனீஸ்வரன் என்பவருக்கு மதிவாணன் இந்த தொழிலை கற்றுக் கொடுத்திருக்கிறார் தொழிலை கற்றுக் கொண்ட முனீஸ்வரன், தெய்வேந்திரன் சலூன் என்கிற பெயரில் தனது தந்தை யாரோடு முடி வெட்டும் தொழிலை கவனித்து வந்திருக்கிறார், தினமும் ஏறத்தாழ மாலை 3 மணி வரை இவரது தந்தை மதிவாணன் முனீஸ்வரனோடு கடையிலிருந்து வேலை பார்த்து வருவது வழக்கமாம், அதன் பிறகு முனீஸ்வரன் மாலை 5 மணி வரை வேலை பார்ப்பாராம் அதற்கு மேல் இவர்கள் கடையில் மின்சாரம் இல்லாததால் வேலை பார்க்க முடியாத நிலையில் வீட்டிற்கு சென்று விடுவாராம், இதே போல நேற்று மாலை 5 மணி அளவில் முனீஸ்வரன் கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு சென்று இருக்கிறார்,
6.30 மணியளவில் உங்களது சலூன் கடை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்று தகவல் வந்திருக்கிறது, அதனையொட்டி நேரில் சென்று பார்த்திருக்கிறார் , அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்து இருக்கிறார்கள்.
அதன் பிறகு 8 மணி அளவில் நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்று இருக்கிறார்கள், காவலர்கள் நிகழ்வு நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டு இருக்கிறார்கள் பிறகு காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுக்கும்படி கூறியதை அடுத்து புகார் கொடுத்திருக்கிறார்கள் அதனைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள், விசாரணையின் முடிவில் தான் என்ன நடந்தது என்கின்ற முழு விவரமும் வெளியாகும், சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரியில் தானாக தீப்பற்றி எரிவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்டவர்கள் கூறும்போது இந்த தீ பற்றியது தற்செயலானது போல தெரியவில்லை என்றும் , யாராவது தொழில் போட்டியின் காரணமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ இதை செய்திருக்கலாம் என்றும் இச்செயலால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
மேலும் கூறுகையில் வேலை செய்வதற்காக வைத்திருந்த பொருட்கள் உள்ளிட்ட சுமார் 70,000 மதிப்புள்ள தளவாடங்கள் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் இவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த இவரது சகோதரியின் குடும்பமும் இவர்களோடு இருப்பதால் மொத்தம் 6 பேரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக இருக்கிறது என்றவர்கள், நாங்கள் எப்படி மீண்டு வர போகிறோம் என்று தெரியவில்லை என்கிறார்கள்.