மாநாடு 20 January 2023
ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தமிழக அரசு உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ட்விட்டர் மூலம் சற்றுமுன் அறிக்கை விட்டுள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகன் ட்விட்டர் மூலம் கூறியிருப்பதாவது : கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்களின் முன்னிலையில் சமீபத்தில் கையெழுத்தானது.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட், இலுமினைட், ஜிர்கான், ரூட்டைல் போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தித் துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான தேரிப்பகுதி மற்றும் தீவிர கடலரிப்பைச் சந்தித்து வரும் தென்மாவட்ட கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் பாதிப்படைய செய்யும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இந்த அறிக்கை தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.