மாநாடு 28 January 2023
தஞ்சாவூரில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த நகைக்கடை தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகைகளுக்கு வட்டியில்லா கடன் தருவதாக கூறி பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை திரட்டி விட்டு கொடுக்க வேண்டிய பணத்தை வாடிக்கையாளர்களிடம் கொடுக்காமல் கடையை காலி செய்து வருவதாக பொதுமக்கள் ஏறக்குறைய 2000 பேர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது அதன் விவரம் பின்வருமாறு:
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூரில் பிரபலமாக இயங்கி வந்த தங்க நகை கடை அசோகன் தங்க மாளிகை, இந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மக்களிடம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்ததன் மூலம் ஏழை, எளியவர்கள், கூலித் தொழிலாளர்கள், மேல் தட்டு மக்கள் என பெரும்பாலானோர் இந்த நகை கடையில் வாடிக்கையாளர் ஆனார்கள்.
மாதாந்திர தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டிக்கொண்டு வந்தால், அந்தத் தொகையின் முதிர்வு காலம் வரும் போது, முழுத் தொகைக்கான நகையும் பெற்றுக் கொள்ளலாம், கூடுதலாக 1 வீட்டுமனையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏராளமானோர் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டினார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்களையும் இணைத்து விட்டிருக்கிறார்கள்,
இந்நிலையில் அசோகன் தங்க மாளிகை பல கிளைகள் தொடங்கப்பட்டு வந்திருக்கிறது, தஞ்சாவூர் மட்டுமின்றி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளிலும் தனது கிளையை பரப்பி இருக்கிறது அசோகன் தங்க மாளிகை.
நேற்று மதியம் 3 மணி வாக்கில் ஒரத்தநாட்டில் உள்ள அசோகன் தங்க மாளிகையில் வாடிக்கையாளர்கள் ஏறக்குறைய 500 பேருக்கு மேல் கூட தொடங்கி இருக்கிறார்கள், இந்த செய்தி பணம் கட்டிய மற்றவர்களுக்கும், வெளியூர் சென்றவர்களுக்கும் சென்று சேர்ந்து இருக்கிறது.அதனையொட்டி அவர்களும் ஒரத்தநாட்டில் உள்ள அசோகன் தங்க மாளிகைக்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள்,
ஏராளமானவர்கள் கூடியதால் நிலைமையை கட்டுப்படுத்த , ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை கட்டுக்குள் வைப்பதற்காக, ஒரத்தநாடு காவல் நிலைய காவலர்களும் அங்கு வந்திருக்கிறார்கள்.
பணம் கட்டி ஏமாந்த சிலரிடம் பேசினோம், அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இந்த கடை 2015 வாக்கில் ஒரத்தநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது, இந்த கடையில் தினந்தோறும் 100 ரூபாய் பணம் கட்டி வந்தால் வருட இறுதியில் அதாவது 365 நாட்களில் 36,500 ரூபாய் கட்டியிருப்போம், அதனோடு கூடுதலாக அசோகன் தங்க மாளிகை நிறுவனத்தால் 3000 ரூபாய் சேர்த்து 39,500 தருவதாகவும் அதில் ஏதாவது நமக்கு பிடித்த வகையில் தங்க நகைகளை செய்கூலி, சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள், அதை நம்பி நாங்களும் தொடர்ந்து பணம் கட்டி வந்தோம் ஆனால் கடந்த 6 மாதமாகவே கடையில் நகைகள் குறைய ஆரம்பித்தது, அப்போதெல்லாம் எங்களுக்கு இப்படி ஒரு நிலை வரும், நாங்கள் ஏமாற்றப்பட போகிறோம் என்பது தெரியாது.
இந்த நிலையில் நேற்று கடையில் எந்தவித நகைகளும், பொருட்களும் இல்லை என்பது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து நாங்கள் நேரில் பார்த்து எங்களது பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று அசோகன் தங்க மாளிகைக்கு வந்தோம் ஆனால் எங்களைப் போலவே எங்களுக்கு முன்னால் இங்கு ஏராளமான மக்கள் நிற்பதை கண்டவுடன் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, ஏனெனில் எங்களால் மொத்தமாக பணம் சேர்க்க முடியாது என்பதற்காக தான் சிறுசேமிப்பில் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வரும் சம்பளத்திலிருந்து பணத்தை கட்டி வந்தோம், அவ்வளவு கடினப்பட்டு கட்டிய பணத்தை இப்படி ஏமாற்றுகிறார்களே இது நியாயமா எப்படியாவது காவல்துறை எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்கள்.
பலரிடமும் பேசியதிலிருந்து அசோகன் தங்க மாளிகை கோடிக்கணக்கில் பொதுமக்களிடம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது, மேலும் வட்டியில்லா நகைக்கடன் பெறுவதற்காக பலரும் இங்கு நகைகளை கொடுத்திருப்பதும் தெரிய வருகிறது, இந்த நிலையில் காவல் நிலையத்தில் வந்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார்களை, பணம் கட்டிய அட்டையோடு கொடுங்கள்
நாங்கள் நடவடிக்கை எடுத்து உறுதியாக உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டு தருவோம் என்று காவல்துறையினர் நேற்று கொடுத்த வாக்குறுதியை நம்பி தற்போது ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட ஏமாற்றம் அடைந்த மக்கள்.
சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி நேரங்களில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு அதில் இலவசங்கள் தரப்படும் என்றும் பெரிய பரிசுகள் தரப்படும் என்றும் ஆசைகளை காட்டி மக்களை ஏமாற்ற கூடாது என்று தமிழக அரசால் தடை செய்யப்பட்டது, அதேபோல தனியார்கள் நடத்தும் சிறுசேமிப்புகளையும், சீட்டு உள்ளிட்டவற்றையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும், பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக வந்திருக்கும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலை கவசம் அணியாதவர்கள் மீதே அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டவர். தஞ்சை மக்களை ஏமாற்றிவிட்டு தலைமாறைவாக இருக்கும் தங்க நகை கடைக்காரரையும் பிடித்து மக்களுக்கு இழந்ததை மீட்டு தர வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.
தப்பி தலை மறைவானவரை, தட்டி தூக்கு வாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுத்திருந்து பார்ப்போம்.
வீடியோவில் பார்க்க தொடவும் : https://youtu.be/AMUioVHq8qk
தமிழக அரசியல் வாதியின் தஞ்சைபினாமிகள் தான் இவர்களின் பாதுகாப்பு