மாநாடு 21 மே 2023
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் அதற்கு காவலர்கள் தன் எல்லைக்குள் போதைப் பொருள்கள் விற்பதை தடுக்க வேண்டும் ஒவ்வொரு காவலர்களும் உறுதிப்பூண்டு போதை பொருட்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் சமீப காலமாக திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் அதிகாரிகளால் தொடர்ந்து பொதுமக்களுக்கு துன்பமும் திமுக ஆட்சிக்கு தீராபழியும் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது .
அதன்படி இன்று கீழவாசல் ரவுண்டானா அருகில் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் கடை திறப்பதற்கு முன்பாகவே விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்த குப்புசாமி என்பவர் மதுக்கடை பாரின் வெளியே சுருண்டு விழுந்திருக்கிறார் அவரை மருத்துவமனைக்கு அங்கு இருந்தவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள் செல்லும் வழியிலேயே
மரணமடைந்திருக்கிறார், விவேக் என்கிற இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தற்போது மரணம் அடைந்திருக்கிறார்.
இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது, கள்ளச் சந்தையில் மது விற்பதை தடுக்க, சட்ட ஒழுங்கை காப்பாற்ற கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பல பகுதிகளிலும் சில காவலர்களின் ஆசியோடு எல்லா நேரமும் கள்ளச்சந்தையில் மது அமோகமாக விற்பனை நடைபெறுவதாக தெரிய வருகிறது.
இது ஆட்சியின் அலட்சியமா? அதிகாரிகளின் அலட்சியமா?
மதுக்கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் போராடிய மக்களின் குரலாக மாநாடு பேசிய காணொலி காண : https://youtu.be/1YrWlHNAFL4