Spread the love

மாநாடு 14 ஜீன் 2023

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இதனை அடுத்து நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு அமலாக்க துறையினர் சோதனையிட வந்திருந்தார்கள் அப்போது நடை பயிற்சிக்காக சென்று இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த செய்தி தெரிந்தவுடன் தனது வீட்டிற்கு வந்தார் அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசியவர் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் சோதனை முடிந்தவுடன் தான் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றார்.

அமலாக்கத்துறை யினர் ஏறக்குறைய 13 மணி நேரம் சோதனையிட்டனர்.அப்போது அமைச்சர்  செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்று காலை 10:40 மணியளவில் இருதய இரத்த நாள பரிசோதனை நடைபெற்றதாகவும் அதில் மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறியப்பட்டு இருப்பதாகவும்,

விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்திருப்பதாகவும் மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

70540cookie-checkஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மருத்துவமனை பரிந்துரை

Leave a Reply

error: Content is protected !!